காஞ்சிபுரம் ஸ்ரீ தாய் படவேட்டம்மன் கோவிலில் மகாவிஸ்வரூப தரிசனம் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் அம்மனை வழிபட்டனர்.


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ தாய் படவேட்டம்மன் கோவிலில் புரட்டாசி மாகாளிய அமாவாசை மறுதினத்தில் இருந்து நவராத்திரி கொலு ஒன்பது நாள் வழிபடுவர். அந்த வகையில் ஸ்ரீ தாய் படவேட்டம்மன் கோவிலில் 46 ஆம் ஆண்டு கோவிலின் தர்மகத்தா வடிவேலு தலைமையில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. நவராத்திரி ஒன்பது நாளில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் ஸ்ரீ தாய் படவேட்டம்மன் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இவற்றை காண ஏராளமான பொதுமக்கள் வருகை புரிந்து ஸ்ரீ தாய் படவேட்டம்மனை தரிசித்து வந்தனர். 




மகிஷாசுரன் வதம் நிகழ்வு 


அந்த வகையில் ஒன்பதாம் நாள் அரக்கன் மகிஷாசுரன் வதம் செய்யும் நாளாகவும் பராசக்தி வெற்றி அடைந்த நாளாகவும், கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மகிஷாசூரன் மரமாக உறுமாரியதை கோவிலின் முன்பு வாழைமரத்தை வாழைதாருடன் கூடிய வாழைப்பூ மரத்தை நடப்பட்டு, ஸ்ரீ தாய் படவேட்டம்மன் கோவில் வாசலில் 20 அடிக்கும் மேலாக காணப்பட்ட வாழைமரத்திற்க்கு பூஜைகளும் தீபாரதனைகளும் செய்யப்பட்டது. 




மரமாக காட்சியளிக்கும் மகிஷாசுரனை வதம் செய்யும் காட்சியை ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் திரண்டு இருந்து கண்டுகளித்தனர். இதனை தொடர்ந்து ஸ்ரீ தாய் படவேட்டம்மனின் மகா விஸ்வரூப தரிசனம் மேற்கொண்டு பூஜைகள் செய்து மகா தீபாராதனை காண்பித்து வழிபட்டனர் இதில் பக்தர்கள் பொதுமக்கள் அம்மனை வழிபட்டு தரிசனம் செய்தனர்.


ஸ்ரீ வேணுகோபால் சுவாமி பஜனைக் கோயில்


காஞ்சிபுரம் அடுத்த ஏரிவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமையானதும், பிரசித்திப்பெற்றதுமான அருள்மிகு ஸ்ரீ வேணுகோபால் சுவாமி பஜனைக் கோவிலில் 75ம் ஆண்டு புரட்டாசி மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.




காஞ்சிபுரம் அடுத்த ஏரிவாக்கம் கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமையானதும், பிரசித்திப்பெற்றதுமான அருள்மிகு ஸ்ரீ வேணுகோபால் சுவாமி பஜனைக் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பல தலைமுறைகளாக புரட்டாசி மாத திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு 75ம் ஆண்டு புரட்டாசி மாத திருவிழாவானது கிராம பொது மக்கள் ஏற்பாட்டில் வெகு விமரிசையாக நடைபெற்றது. 


சுவாமி திருவீதி உலா


அதையொட்டி காலை வேணுகோபால் சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து,மாலை வேளையில் சிறப்பு பூஜையானது நடந்தேறி தீபாராதனைகள் காட்டப்பட்டது. அதனைதொடர்ந்து பல வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி, புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் அலங்காரத்தில் வேணுகோபால் சுவாமி காட்சியளித்தார்.இதன்பின் தீபாராதனைகள் காட்டப்பட்ட பின்னர், நாதஸ்வரம், பேண்ட் வாத்தியங்கள் முழங்க ,கரகாட்டம் ஆடிட, வாணவேடிக்கையுடன் கிராம வீதிகளில் வேணுகோபால் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.




வழி நெடுகிலும் ஏராளமான கிராம பொது மக்கள் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் அலங்காரத்தில் திரு வீதி உலா வந்த வேணுகோபால் சுவாமிக்கு கற்பூர தீபாராதனை காண்பித்து வேண்டி விரும்பி வழிபட்டனர். மேலும் இவ்விழாவில் அனைவருக்கும் அன்னதான பிரசாதமும், அருட்பிரசாதங்களும் வழங்கப்பட்டது.


ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு ஸ்ரீ கலைமகள் நாடக மன்றம் நாடக கூத்துடன் இத்திருவிழாவானது நிறைவுபெறுகிறது. 75ம் ஆண்டு புரட்டாசி மாத திருவிழாவை முன்னிட்டு ஏரிவாக்கம் கிராமே திருவிழா கோலம் பூண்டது என்பது குறிப்பிடத்தக்கது.