தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 11ம் தேதி வரை தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Continues below advertisement


இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்க காரணமாக என்ன ?


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின்பும், மேற்கில் இருந்து வரும் காற்றின் தாக்கம் இன்னும் குறையாமல் உள்ளது. அதேநேரத்தில் கிழக்கு திசை காற்று முழுமையாக தமிழகத்திற்கு கிடைக்காமல் உள்ளது. இதனால், பருவமழை பொழிவில் கடந்த சில நாட்களாக தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது. 


பல இடங்களில் பகல் நேர வெப்பநிலை அதிகரிப்பதும், அதனால் மாலை, இரவு நேரங்களில் வெப்பச்சலன மழை பெய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே போன்ற நிலை வரும் 12ம் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, கிழக்கு திசை காற்று வேகம் எடுக்கும் போது இயல்பாஇ வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைய வாய்ப்புள்ளது‌ வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


செங்கல்பட்டு மாவட்டத்தில் நிலவரம் என்ன ? Chengalpattu Weather Forecast Today 


செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று காலை 10 (04-11-2025) மணி முதல் பல இடங்களில் மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கனித்துள்ளது.


திருவள்ளூர் மாவட்டத்தின் நிலை என்ன ? Thiruvallur Weather Forecast Today 


திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை இன்று காலை 10 மணி வரை பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை நேரங்களில் திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, பூண்டி மற்றும் ரெட்டில்ஸ் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 


காஞ்சிபுரம் மாவட்டத்தின் நிலை என்ன ? Kanchipuram Weather Forecast Today 


காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை காலை 10 மணி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலை வருகின்றன பதினொன்றாம் தேதி வரை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.