இந்தியாவும் அதன் கிராமங்களும்
இந்தியாவின் வளர்ச்சி கிராமங்களின் வளர்ச்சி தான். அதிக கிராமங்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. கிராமங்களில் பஞ்சாயத்து ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது. நம் நாட்டின் பஞ்சாயத்து ஆட்சி முறையானது, நமது பழமையான ஜனநாயக மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளின் ஆன்மாவாக இருந்து வருகிறது . அந்த வகையில் பஞ்சாயத்து ஆட்சி முறைக்கும், தேர்தல் முறைக்கும் முன்னோடியாக இன்றைய தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராமம் இருந்து வந்துள்ளது. இதை உத்திரமேரூர் கல்வெட்டு நிரூபித்து இருக்கிறது . இன்று நாம் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை கொண்டாடும் வேளையில் , உத்திரமேரூர் கல்வெட்டை குறித்து தெரிந்து கொள்வோம்.
வரலாற்று சிறப்புமிக்க உத்திரமேரூர் ( uthiramerur )
வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள உத்திரமேரூர் திகழ்ந்து வருகிறது. உத்திரமேரூரில் பண்டைய காலத்தில் நான்மறையுணர்ந்த வேதியர்கள் நிறைந்து விளங்கியதால் உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலம், ராஜேந்திரசோழ சதுர்வேதிமங்கலம், விஜய கண்டகோபால சதுர்வேதி மங்கலம், வடமேருமங்கை, பாண்டவவனம் என்றும் உத்திரமேரூர் என்றும் பெயர் வழங்கப்பட்டது.
உத்திரமேரூரில் பல பல்லவர்கால பழமையான கோவில்கள் உள்ளன, மேலும் பல்லவர், பாண்டியர், சோழர், ஜயநகர மன்னர் காலத்து 100க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கிடைத்துள்ளன . உத்திரமேரூர் பல்லவ மன்னனான இரண்டாம் நந்திவர்மனின் ஆட்சிக்காலத்தில் பிராமணர்கள் மட்டும் வசிக்கக்கூடிய , கிராமமாக கி.பி.750 காலகட்டத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம். கிராமத்தில் 1100 -1200 பிராமணர்களுக்கு இந்த கிராமம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் உள்ளது.
உத்திரமேரூர் குடவோலை முறை கல்வெட்டு கல்வெட்டு ( uthiramerur kudavolai Kalvettu )
உத்திரமேரூரில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் இருந்தாலும் , ஊர் சபை குறித்த கல்வெட்டுகள் முக்கிய பார்க்கப்படுகிறது. குடவோலை முறை பற்றி முதல் கல்வெட்டு 12 வரிகளைக் கொண்டதாகவும், இரண்டாம் கல்வெட்டு 18 வரிகள் கொண்டதாகவும் உள்ளது. இந்த கல்வெட்டுகள் வைகுண்ட பெருமாள் கோவிலில் ஒரு பகுதியில் அமைந்துள்ளன. இந்த கல்வெட்டுகள் அனைத்தும் முதலாம் பராந்தங்க சோழனின் ஆட்சிக்காலத்தை சேர்ந்தவை . கல்வெட்டின் படி கிராம சபை நிர்வாகத்திற்கு தேவையான குழுக்களை தேர்ந்தெடுப்பது தொடர்பான அரசாணை தொடர்பான விவரங்கள் உள்ளன .
இதன்படி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் பொழுது, அரசு அதிகாரி உடன் இருக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சம்வத்ஸர வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம், பொன்வாரியம், பஞ்சவாரியம், போன்ற வாரியங்கள் அமைக்கப்பட்டு அதன் செயல்பாட்டுக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் .
உறுப்பினர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் (Qualifications for members)
தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு ஆறு தகுதிகள் இருக்க வேண்டுமென குறிப்பிடப்படுகின்றன . ஆனால் உறுப்பினர்கள் தகுதிகள் குறித்து குறிப்பிடும் பொழுது, வேத சாஸ்திரத்தில் வல்லுனர்கள் மட்டுமே இதில் உறுப்பினராக இருக்க முடியும் என்று குறிப்பிடுவதால் , அக்காலத்தில் பிராமணர்களால் மட்டுமே உறுப்பினராகி இருக்க முடியும் என ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.
1. 1/4 வேலிக்கு மேல் இறை கட்டும் நிலம் வைத்திருக்கவேண்டும்
2. சொந்த மனையில் வீடு கட்டப்பட்டிருக்கவேண்டும்
3. வயது 30 மேல் 60க்குள் இருக்கவேண்டும்
4. வேதத்திலும் சாஸ்திரத்திலும் தொழிலும் காரியத்திலும் நிபுணராக இருக்கவேண்டும்.
5. கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக்கூடாது. அவ்வாறு வாரிய உறுப்பினராக இருந்தோரும், அவர்களதுநெருங்கிய உறவினர்களும் உறுப்பினராக இயலாது.
2. சொந்த மனையில் வீடு கட்டப்பட்டிருக்கவேண்டும்
3. வயது 30 மேல் 60க்குள் இருக்கவேண்டும்
4. வேதத்திலும் சாஸ்திரத்திலும் தொழிலும் காரியத்திலும் நிபுணராக இருக்கவேண்டும்.
5. கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக்கூடாது. அவ்வாறு வாரிய உறுப்பினராக இருந்தோரும், அவர்களதுநெருங்கிய உறவினர்களும் உறுப்பினராக இயலாது.
அதேபோன்று இரண்டாவது கல்வெட்டில் , உறுப்பினராவதற்கான தகுதிகள் சற்று மாற்றப்பட்டிருக்கின்றன , குறிப்பாக வயதை பொருத்தவரையில் 35 வயதிற்கு மேலும் 70 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஏதாவது வாரியத்தில் உறுப்பினராக இருந்து சரியாக கணக்கு காட்டாமல் சென்றவர்களும் அவரது உறவினர்களும் உறுப்பினராக கூடாது ( தாயின் சிறிய, பெரிய சகோதரிகளின் மக்கள் - தந்தையின் சகோதரிமக்கள் - மாமன் - மாமனார் - மனைவியின் தங்கையை மணந்தவர் - உடன் பிறந்தாளை திருமணம் செய்தவர் - தன் மகளை மணம் புரிந்த மருமகன் . இது போன்ற சுற்றத்தினர் யாரும் தங்களது பெயர்களைக் குடவோலைக்கு எழுதுதல் கூடாது ) என்ற மற்றொரு விதி உள்ளது. லஞ்சம் வாங்கியவர்கள், கொலை குற்றம் செய்யத் தூண்டுபவர், கொலை செய்பவர் அடுத்தவர் பொருளை அபகரிப்பவர் ஆகியோரும் உறுப்பினராக முடியாது .
தேர்தல் முறை எப்படி இருந்தது ? ( Mode Of Election )
தகுதி இருக்கும் உறுப்பினர்களின் பெயர்களை தனித்தனியாக ஒவ்வொரு , குடும்பும் வேலையில் எழுதி ஒரு குடத்தில் இட்டு அதன் வாயைக் கட்டி வைத்துக் கொள்வார்கள் , தேர்தல் நாளன்று சபையில் ஊரில் உள்ள அனைவரும் கூடியிருக்க வேண்டும் . அதேபோன்று பூசாரிகளும் அங்கு இருக்க வேண்டும் அப்படி இருக்கும் பூசாரிகளில் வயதானவர் ஒருவர் ஒரே குடும்பிலிருந்து, ஓலை இடப்பட்டுள்ள ஒரு குடத்தை தூக்கி எல்லோரும் நன்கு காணும் மக்களிடம் காட்ட வேண்டும் . பின்பு அந்த குடத்தை குலுக்கிய பிறகு அங்கு இருக்கும் சிறுவனை , கொண்டு ஓலையை எடுக்க செய்வார்கள். அந்த ஓலையில் உள்ள பெயர் வாசிக்கப்பட்டு எழுதிக் கொள்ளப்படும் இதுபோலவே எல்லா காரியத்திற்கும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கல்வெட்டின் முக்கியத்துவம் என்ன ?
இந்த கல்வெட்டில் மிக முக்கியம் வாய்ந்த விஷயம் என்னவென்று , இன்றைய காலத்தில் நாம் கிராமங்களில் தூய்மை, பற்றியும் சுகாதாரத்தை பற்றியும், வளர்ச்சியை பற்றியும் பேசி வருகிறோம். ஆனால் அந்த காலத்திலேயே ஊராட்சி நிர்வாகம் மிக தூய்மையாக இருந்ததற்கு இந்த கல்வெட்டு எடுத்துக்காட்டாக உள்ளது. உத்திரமேரூரில் மட்டுமில்லாமல் சோழ நாட்டில் பல்வேறு இடங்களிலும் இதுபோன்ற கல்வெட்டுகள் கிடைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது இது இப்பொழுது இருக்கும் மக்களாட்சியை போல் இருந்திருக்காது என்ற கூற்றும் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் 1200 ஆண்டுகளுக்கு முன்பாகவே உள்ளாட்சியை பற்றி குறிப்பு உள்ள கல்வெட்டு இந்தியாவில் மிக முக்கியம் வாய்ந்த கல்வெட்டாகவே பார்க்கப்படுகிறது.