காஞ்சிபுரம் வட்டார பகுதியில் அதிக பாரம் இயற்றிய வாகனங்கள் மற்றும் விதிகளை மீறி சென்ற 152 வாகனங்கள் மீது 22,07735 அபராதம் விதித்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்

வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் திடீர் ஆய்வு

காஞ்சிபுரம் திம்மசமுத்திரம் பகுதியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பொழுது 20க்கும் மேற்பட்ட வாகனங்களை தணிக்கை செய்தனர்.

மேலும் கடந்த மாதம் காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜ்,மோட்டார் வாகன ஆய்வாளர் சிவராஜ் ஆகியோர் உத்திரமேரூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அதிரடி ஆய்வில் சிக்கிய வாகனங்கள்

இதில் விதியின் மீறி அதிகாரம் இயற்றிய சரக்கு வாகனங்கள், தகுதி சான்று புதுப்பிக்காத வாகனங்கள், ஓட்டுனர் உரிமம், அனுமதி சீட்டு, வரி செலுத்தாத வாகனங்கள், தார்பாலின் முடாத வாகனங்கள் என விதியை மீறி இயக்கிய 125 வாகனங்கள் மீது அபராதம் மோசடித்தும் வாகனத்தை சிறைபிடித்தும் என 152 வாகனங்கள் சோதனை மேற்கொண்டதில் மொத்தமாக ரூ.22,07735 வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆவணங்கள் இன்றி பயன்படுத்திய 16 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்ததாவது: காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவுபடி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவராஜ் உள்ளிட்டோர், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில், விதியை மீறி அதிக பாரம் ஏற்றிய சரக்கு வாகனங்கள், தகுதிச்சான்று புதுப்பிக்காத, ஓட்டுநர் உரிமம், அனுமதி சீட்டு, வரி செலுத்தாத, தார்பாலின் மூடாத, அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் வாகனங்கள் என, விதியை மீறி இயக்கிய 152 வாகனங்கள் கடந்த ஜூலை மாதம் கண்டறியப்பட்டது.

இந்த வாகனங்களுக்கு வரி, அபராதம் வசூலித்தும், வாகனத்தை சிறை பிடித்து அபராதம் வசூலித்தது என, ஒரே மாதத்தில் மொத்தமாக 22 லட்சத்து 7,735 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. விதியை மீறும் வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும், ஓட்டுநர் உரிமம், தகுதி சான்று, அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனம், பயணியர் மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சிறைபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தெரிவித்தார்.