பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு இட அனுமதி கிடைத்ததுடன், அடுத்தக்கட்ட பணிகள் வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை இரண்டாவது விமான நிலையம் (Chennai Second Airport)
சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் காலத்தின் கட்டாயம் என பல ஆண்டுகளாகவே, மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இறுதியில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு, இடம் தேர்வு செய்யப்பட்டது.
பரந்தூர் பசுமை விமான நிலையம் - parandur Greenfield airport
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 13 கிராமப் பகுதிகளை உள்ளடக்கி, 5700 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைப்பதால் பரந்தூர், நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாம்புரம், மேலேறி ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளும் அகற்றப்பட உள்ளதால் அக்கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக கிராமங்கள் தொடர் போராட்டத்தையும் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலம் எடுக்கும் பணி
நிலம் எடுப்பதற்கான அறிவிப்புகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக பொடாவூர், மகாதேவி மங்கலம், சிறுவள்ளூர், மற்றும் பரந்து உள்ளிட்ட கிராமங்களில் நிலம் வையகப்படுத்துவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. நிலம் உரிமையாளர்கள் ஆட்சபனை தெரிவிக்கலாம் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுறுசுறுப்பாக நடைபெறும் பணி
இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு, மூன்று மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில் மூன்று துணை ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிலம் கையகப்படுத்தும் பணிக்காக 29 தாசினார்கள், 6 துணை தாசில்தார்கள், 324 பேர் பணி அமர்த்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனுமதி கிடைப்பது எப்பொழுது ?
விமான நிலையம் அமைப்பதற்கு முதலில் இடத்திற்கு அனுமதி ஒப்புதல் பெறுவது அவசியம், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பரந்தூர் விமான நிலையத்திற்கான இடம் அனுமதி வேண்டி தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகத்தால் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. பரந்தூரில் முன்மொழிக்கப்பட்ட விமான நிலையத்திற்கு மத்திய அரசிடம் இருந்து இடத்திற்கான அனுமதி இந்த மாத இறுதியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இட அனுமதி கிடைத்தவுடன் அடுத்த கட்ட பணிகள் வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த அறிவிப்பு கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன செய்யப் போகிறது அரசு?
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் 700 வந்து நாளை கடந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்ட குழுவினர் மற்றும் பொதுமக்களை, அரசு எப்படி சமாளிக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.