ஸ்ரீபெரும்புதூர் வடகால் சிப்காட் பகுதியில் தயார்நிலை தொழில் கூடம் கட்டுவதற்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிப்காட் நிறுவனத்திற்கு மூன்று விதமான வருவாய்க்கள் கிடைக்கப்பட உள்ளன.
தமிழ்நாடு அரசின் முன் முயற்சிகள்
தமிழ்நாடு அரசு சார்பில் தொடர்ந்து முதலீட்டாளர்கள் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சிறிய தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களை தொடங்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.
தொழில் பூங்காக்கள் - Sipcot
தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியைத் மேம்படுத்துதல், தமிழ்நாடு மாநிலத் தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) 1971 இல் நிறுவப்பட்டது. அதன் தொடக்கத்திலிருந்து, 6 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டு 40 தொழில் பூங்காக்களின் வளர்ச்சியை வளர்த்து வருகிறது. 16 மாவட்டங்களில் மொத்தம் சுமார் 45,000 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது.
பெரிய தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு உள்கட்டமைப்பு வசதிகளுடன், தொழில் பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. அந்தப் பூங்காவில் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். தொழில் நிறுவனங்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப தொழிற்சாலை அமைத்து உற்பத்தி ஆரம்பிக்கும். இதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சிறு நிறுவனங்களுக்கு சிக்கல் - Small Industries Facing Problem
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் இருக்கக்கூடிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நிலத்தின் மதிப்பு என்பதால் சிறு நிறுவனங்களால் இடங்கள் வாங்குவதில் சிக்கல் இருந்து வருகிறது. பெரு நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரித்து கொடுக்கும் நிறுவனங்கள், தொழில் தொடங்க வேண்டுமென்றால் அதிக முதலீடு செய்ய வேண்டிய சூழல் இருந்து வருகிறது.
இதனால் சிறு நிறுவனங்கள் சிப்காட் பகுதியில் தொழில் தொடங்குவதில் சிக்கல் இருந்து வருவதாக, புகார் இருந்து வந்தது. எனவே சிப்காட் சார்பில் சிறு நிறுவனங்களின் மூலதன செலவை குறைக்க திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் சிப்காட் நிறுவனம், "பிளக் அண்டு பிளே" எனப்படும் தொழில்கூடங்கள் தயார் நிலையில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் அமைகிறது
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் -வடகால் சிப்காட் பகுதியில் தயார் நிலை தொழில் கூடம் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பகுதியில் பொது மற்றும் கூட்டு முயற்சியில் 1.30 லட்சம் சதுர அடியில் இந்த தொழில் கூடம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்ட நிலையில், தொழில் கூடம் அமைப்பதற்கு காசா கிராண்ட் நிறுவனம் தேர்வாகியுள்ளது.
சிறப்பம்சங்கள் என்ன ? Key Features Of Readymade Industry
இந்த தொழில் கூடம் தயாரான பிறகு, நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் இடம் வழங்கியதற்காக வருவாய் கிடைக்கும். ஆண்டு குத்தகை மற்றும் ஒப்பந்த நிறுவனம் ஈடுபடும் மொத்த வருவாயில் ஒரு பங்கு என மூன்று வகையில் வருவாய் கிடைக்கப் உள்ளது.
குறைந்த முதலீடு என்பதால் சிறு நிறுவனங்கள் அதிக அளவு முதலீடு செய்யும். இதன் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்படும். இதன் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.