காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் 17.052024 அன்று தொடங்கி 01.06.2024 வரை 16 நாட்கள் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. இதில் 22.05.2024 அன்று கருடசேவை திருவிழாவும், 26.05.2004 அன்று திருத்தேர் உற்சவமும் 28.05.2024 அன்று தீர்த்தவாரி திருவிழாவும் நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து சுமார் 4,00.000 பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என   எதிர்பார்க்கப்படுகிறது.

 

கருடசேவை மற்றும் திருத்தேர் செல்லும் சாலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின் ஒயர்களில் மின்விபத்து ஏற்படாவண்ணம் தற்காலிகமாக மின் இணைப்பை துண்டித்தல், மின்கசிவு ஏற்படாவண்ணம் பாதுகாத்தல் மற்றும் தேருக்கு இடையூராக உள்ள மின்சார ஒயர்களை முறைப்படுத்தும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.

 

காவல்துறை ஏற்பாடு என்ன ?

 

மேலும், இத்திருவிழாவின் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் உட்பட சுமார் 1500 காவல்துறையினருடன் ஊர்க்காவல்படையினர். NCC/NSS மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். முக்கிய இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து காவலர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து மாற்றம்


கருடசேவை 22.05.2024) மற்றும் திருத்தேர் 26.05.2024  வீதிஉலா நடைபெறும் நாட்களில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள் கீழ்காணும் தற்காலிக பேருந்துநிலையம் வரை வந்துசெல்லும்  என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

ஒலிமுகமது பேட்டை தற்காலிக பேருந்து நிறுத்தம்: திருத்தணி, திருப்பதி, அரக்கோணம்,  ஓச்சேரி,  வாலாஜா,  வேலூர், பெங்களூர்  ஆகிய பேருந்துகள் இங்கிருந்து செல்லும்


புதிய ரயில் நிலையம்: சுங்குவார்சத்திரம்,  ஸ்ரீபெரும்புதூர்,  பூந்தமல்லி,  சென்னை ஆகிய ஊர்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் செல்லும்.


பழைய ரயில் நிலையம் :   தாம்பரம்,  செங்கல்பட்டு,  வாலாஜாபாத் ஆகிய ஊர்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் புறப்படும்


ஓரிக்கை -- மிலிட்டரி ரோடு:  உத்திரமேரூர் மற்றும் மதுராந்தகம் ஆகிய ஊர்களுக்கு இங்கிருந்து பேருந்துகள்  புறப்படும்.


மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: வந்தவாசி,  செய்யார்,  சேலம், திருச்சி  திருவண்ணாமலை, விழுப்புரம்,  திண்டிவனம், பாண்டிச்சேரி, தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் புறப்படும்.


 


காவல்துறை சார்பில் வேண்டுகோள் என்ன ?


1. இத்திருவிழா நாட்களில் குழந்தைகள் மற்றும் வயது முதியோர்களை பாதுகாப்பாக அழைத்துச்செல்பவர்கள் அழைத்துச்செல்ல கேட்டுக்கொள்ளப்படு கின்றனர்.
2. பொதுமக்களுக்கு உதவியாக முக்கிய இடங்களில் காவல்துறை உதவிமையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
3. மாநகராட்சியின் சார்பில் தேர்செல்லும் முக்கிய வீதிகளில் குடிநீர் தொட்டிகள், நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
4. குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டு தொடர்ந்து நகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.





5. நாச வேலைகளில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கும் பொருட்டு காவல்துறையினர் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
6. உணவு பாதுகாப்புத்துறை மற்றும் இந்து அறநிலையத்துறையிடம் அனுமதிபெற்ற பின்னரே அன்னதானம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் மேற்படி அன்னதானம் வழங்கும் இடங்களில் மட்டுமே அன்னதானம் பெற கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
7. திருவிழா காலங்களில் திருக்கோயிலை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் சாமிஊர்வலம் செல்லும் பாதைகளை தூய்மையாக வைத்துக்கொள்ளும் பொருட்டு வைக்கப்பட்டுள்ள மாநகராட்சி சார்பில் குப்பைத் தொட்டிகளை பயன்படுத்த பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
8. திருவிழாக்காலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் மாற்று வழித்தடங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
9. மருத்துவக் குழு சார்பில் திருவிழா காலங்களில் திருத்தேர் மற்றும் சாமிஊர்வலம் செல்லும் பாதைகளில் உள்ள முக்கிய சந்திப்புகளில் பந்தல் அமைத்து மருத்துவமுகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காலங்களில் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.