காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் 


கோவில் நகரம் காஞ்சிபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற அத்தி வரதர் புகழ் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம்  கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெற இருக்கும் இந்த விழாவில், காலை மற்றும் மாலை வேளை என இரண்டு வேளைகளிலும் உற்சவங்கள் நடைபெறுகிறது. 



முதல் நாள் காலை உற்சவம்


அந்த வகையில் காலை தங்க சப்பரம் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஊரா நிற பட்டுருத்தி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.‌  வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்ட பெருமாள், ரங்கசாமி குளம், விலக்கடி கோவில் தெரு, மேட்டு தெரு, பேருந்து நிலையம், கச்சபேஸ்வரர் கோயில் , சங்கர மடம் வழியாக மீண்டும் சுவாமி வரதராஜ பெருமாள் கோவில் வந்து அடைகிறார். 



 திடீரென பெய்த மழை


சாமி புறப்பாடு மேற்கொண்டபொழுது மழை பெய்ய தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெயில் காலத்தில் சுவாமி வெளியே வந்ததால் மழை வந்ததாக பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா எனும் முழக்கமிட்டு, பக்தி பரவச பரவசத்துடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். விடாமல் மழை மற்றும் தூறல் பெய்திருந்தாலும் சாமி தூக்கும் , பாத தாங்கிகள் மழையும் பொருட்படுத்தாமல் உற்சாகத்துடன் வீதி உலா சென்றனர்.

சிம்ம வாகன உற்சவம்


தொடர்ந்து இரவு அத்திகிரி மலையில் இருந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் இறங்கி வந்த ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து,சிறப்பு அலங்காரத்தில் தங்க கொடி மரத்தருகே உள்ள மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். முதல் நாள் இரவு உற்சவத்தை ஓட்டி இன்று தங்க சிம்ம வாகனத்தில் பட்டாச்சாரியார்கள் வெண்சாமரம் வீச ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஊர்வலமாக  புறப்பட்டு காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


தங்க சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்த வரதராஜ பெருமாளை அகோபில மட ஜீயர் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.




 


நாளை கருட சேவை  உற்சவம்


மே மாதம் 22 ஆம் தேதி ( 22- 05-2024 ) :  திருவிழாவிற்கு மிக முக்கிய உற்சவம் மாத இருக்கக்கூடிய  கருட சேவை ( kanchipuram varadharaja perumal temple garuda sevai ) மற்றும் கோபுர தரிசனம்  உற்சவம்  நடைபெறுகிறது. அதிகாலை 4 மணிக்கு  அத்திகிரி மலையில் இருந்து சுவாமி  புறப்பாடு நடைபெறுகிறது, தொடர்ந்து  கருட வாகனத்தில் பக்தர்களுக்கு  காட்சியளிக்கிறார். அன்று இரவு உற்சவம் அனுமந்த வாகனத்தில் சுவாமி காட்சியளித்தார்.

 

மே மாதம் 23ஆம் தேதி ( 23- 05-2024  ) : நாக  வாகனத்தில் ஸ்ரீ பரமநாதர் திருக்கோளத்தில் ,  காலை பக்தர்களுக்கு காட்சி தருகிறார். தொடர்ந்து  மாலை  சந்திர பிரபை வாகனத்தில்  திருவீதி உலா   தரிசனம் தருகிறார். தொடர்ந்து  நெல்  அளவை  நிகழ்ச்சியும் அன்றைய தினம் நடைபெறுகிறது.

 


மே மாதம் 26ஆம் தேதி ( 26- 05-2024 ) :  விழாவின் பிரதான திருவிழா  திருத்தேர் உற்சவம்  நடைபெறுகிறது. காலை 2 மணியளவில்  உற்சவர் புறப்பாடும், தொடர்ந்து திருத்தியரை சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும், இதனை அடுத்து தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக  திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது.  அன்றைய தினம் மாலை  உற்சவம் கிடையாது.