Kanchipuram  Power Shutdown Tomorrow 24-12-2024: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு சார்பில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் மாதத்திற்கு ஒருமுறை பராமரிப்பு பணி காரணமாக மின்தடை மேற்கொள்வது வழக்கமான ஒன்றாக இருந்து வருகின்றது. 

Continues below advertisement


துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளும் காலகட்டத்தில், காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் நிறுத்தும் மேற்கொள்வது வழக்கமாக இருக்கிறது. சில சமயங்களில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கும் நேரம் மாறுபடும். மின்சார துறை சார்பில் மின் நிறுத்தும் மேற்கொள்வதற்கு முன்பு அது குறித்து அறிவிப்புகளும் வெளியிடப்படும். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (24-12-2024) மின்தடை மேற்கொள்ளப்பட உள்ள இடங்கள் குறித்து நாம் தெரிந்து கொள்வோம்.


காஞ்சிபுரம் களியாம்பூண்டி துணை மின் நிலையம்:


களியாம்பூண்டி, உத்திரமேரூர், நீரடி, வேடபாளையம், காரணிமண்டபம், களியாம்பூண்டி, மேல்பாக்கம், திருப்புலிவனம், மருதம், சிலாம்பாக்கம், ஆண்டி தாங்கல், காவாந்தண்டலம், காவாம்பயிர், கம்பராஜபுரம், ஆதவபாக்கம், புலிவாய், ஆசூர், நெய்யாடுபாக்கம், மலையாங்குளம், வய லக்காவூர், படூர், சிறு மயிலுார், பெருநகர், மானாம்பதி.


மாகறல், ஆற்பாக்கம், களக்காட்டூர், இளையனார் வேலுார், ஆக்கூர், தண்டரை, ராவத்தநல்லுார், கண்டிகை, உக்கல், ஆலத்துார், கூழமந்தல், தேத்துறை, அத்தி, இளநீர்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.


மீண்டும் வருவது எப்போது ?


நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.