Kanchipuram Power Power Cut Details: மின்சாரம் இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான ஒன்றாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு சார்பில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் மாதத்திற்கு ஒருமுறை பராமரிப்பு பணி காரணமாக மின்தடை மேற்கொள்வது வழக்கமான ஒன்றாக இருந்து வருகின்றது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளும் காலகட்டத்தில், காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் நிறுத்தும் மேற்கொள்வது வழக்கமாக இருக்கிறது. சில சமயங்களில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கும் நேரம் மாறுபடும். மின்சார துறை சார்பில் மின் நிறுத்தும் மேற்கொள்வதற்கு முன்பு அது குறித்து அறிவிப்புகளும் வெளியிடப்படும். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (18-12-2024) மின்தடை மேற்கொள்ளப்பட உள்ள இடங்கள் குறித்து நாம் தெரிந்து கொள்வோம்.
நீர்வள்ளுர் 110/33-11 கே.வி துணை மின் நிலையத்தில் மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுவதால் மின்தடை அறிவிப்பு:
நீர்வள்ளுர் 110/33-11 கே.வி துணை மின் நிலையத்தில் 18.12.2024 அன்று புதன் கிழமை காலை 09:00 மணி முதல் பிற்பகல் 03:00 மணி வரை மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அந்த நேரத்தில் நீர்வள்ளுர் மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகள் சின்னையன் சத்திரம், ராஜகுளம், கரூர், அத்திவாக்கம், நீர்வள்ளுர், தொடுர், மேல்மதுரமங்களம், சிங்கில்பாடி, கண்ணன்தாங்கல், குணகரம்பாக்கம், மதுரமங்களம், செல்வழிமங்களம், சிங்காடிவாக்கம், சின்னிவாக்கம், மருதம் ஆகிய கிராமங்களிலும், பரந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகள் காரை, சிறுவாக்கம், ஆண்டிசிறுவள்ளுர், நாகப்பட்டு, ஏகனாபுரம், கொட்டவாக்கம், எடையார்பாளையம், செல்லம்பட்டிடை, கோட்டூர், எலுமயன் கோட்டூர், பிச்சிவாக்கம், துளசாபுரம், கண்டிவாக்கம், 144 தண்டலம், நெல்வாய் மற்றும் மேல்படுவூர் ஆகிய கிராமங்களிலும் 18.12.2024 அன்று புதன் கிழமை காலை 09:00 மணி முதல் பிற்பகல் 03:00 மணி வரை மின் தடை ஏற்படும் என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்/ காஞ்சிபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.