Kanchipuram Power Power Cut Details: மின்சாரம் இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான ஒன்றாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு சார்பில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் மாதத்திற்கு ஒருமுறை பராமரிப்பு பணி காரணமாக மின்தடை மேற்கொள்வது வழக்கமான ஒன்றாக இருந்து வருகின்றது
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளும் காலகட்டத்தில், காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் நிறுத்தம் மேற்கொள்வது வழக்கமாக இருக்கிறது. சில சமயங்களில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கும் நேரம் மாறுபடும். மின்சார துறை சார்பில் மின் நிறுத்தும் மேற்கொள்வதற்கு முன்பு அது குறித்து அறிவிப்புகளும் வெளியிடப்படும். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (17-12-2024) மின்தடை மேற்கொள்ளப்பட உள்ள இடங்கள் குறித்து நாம் தெரிந்து கொள்வோம்.
மின்தடை - Power Outage
சிறுகாவேரிபாக்கம் மற்றும் வெள்ளைகேட் பிரிவு, ஆரியபெரும்பாக்கம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிபாக்கம் மற்றும் வெள்ளைகேட் பிரிவில் 230 கி.வோ. ஆரியபெரும்பாக்கம் துணைமின் நிலைய பராமரிப்பு பணிகளுக்காக வரும் 17.12.2024 செவ்வாய்கிழமை அன்று மேற்கொள்ளப்பட உள்ளது என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் காஞ்சிபுரம் / வடக்கு கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் முன்கூட்டியே மின் சார்ந்த பணிகளை முடித்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் என்ன ? Power Cut
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கீழம்பி, பள்ளம்பி, சிறுகாவேரிபாக்கம், திம்மசமுத்திரம், கருப்படிதட்டிடை, மங்கையர்கரசி நகர், அச்சுகட்டு, ஜே.ஜே நகர், ஆரியபெரும்பாக்கம், கூரம், செம்பரம்பாக்கம், புதுப்பாக்கம், பெரியகரும்பூர், சித்தேரிமேடு, துலுக்கம்தண்டலம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
மீண்டும் மின்சாரம் எப்போது வரும் ?
17.12.2024 நாளை செவ்வாய்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை மின் தடை ஏற்படும். பராமரிப்பு பணிகள் முன்கூட்டியே முடிந்துவிட்டால் அதற்கு முன்பாகவும் மின்சார வர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.