காஞ்சிபுரம் மாநகராட்சியின் பணிகள் குழு தலைவர் தேர்தல், திமுக மேயர் எதிர்ப்பு கவுன்சிலர் குழு தலைவராக போட்டியின்றி  தேர்வு செய்யப்பட்டார்.


காஞ்சிபுரம் மாநகராட்சி



காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல், கடந்த 2022 ஆம் ஆண்டு, நடைபெற்றது. மொத்தம் உள்ள 51 வார்டுகளில் 32 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தம் 33 வார்டுகளில் வெற்றி பெற்று, திமுக கூட்டணி காஞ்சிபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியது. அதிமுக 9 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளிலும், பாஜக 1 வார்டிலும், பிற இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றிருந்தனர். சுயேட்சைகள் பலரும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். மேயர் தேர்தலில் மகாலட்சுமி யுவராஜ் காஞ்சிபுரத்தில் முதல் மேயராக பதவி ஏற்றார்.


 




 


தொடர்ந்த எதிர்ப்பு


காஞ்சிபுரம் மேயராக மகாலட்சுமி பொறுப்பேற்று இருந்தாலும், சில மாதங்களிலேயே கவுன்சிலர்களால் பிரச்சனை எழத் துவங்கியது. திமுகவை சார்ந்த கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக திரும்பத் தொடங்கினர். திமுக தலைமை கழகம் சார்பில், அதிருப்தி திமுக கவுன்சிலர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைச்சர் நேரு முன்னிலையிலும், தலைமை நிலைய நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.


LIVE | Kerala Lottery Result Today (06.08.2024): கேரளா லாட்டரி முடிவு இன்று (06.08.2024): ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-427 செவ்வாய் டிரா அவுட் - முதல் பரிசு 75 லட்சம்


நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி


இந்தநிலையில், கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி மேயருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அன்றைய தினம் 51 கவுன்சிலர்களும் கலந்து கொள்ளாமல் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியில் முடிவடைந்தது. இதனால் திமுகவின் தற்போதைய மேயர் மகாலட்சுமி யுவராஜ் பதவி தப்பியது. அந்தக் கூட்டத்தில் மேயர் தரப்பு ஆதரவு கவுன்சிலர்கள் மற்றும் எதிர்ப்பு கவுன்சிலர்கள் கலந்து கொள்ளாமல் இருந்ததன் பின்னணியில், திமுக தலைமை இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. 


பணிக்குழு  தலைவர்


இந்தநிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஆறு நிலைக் குழுக்கள் உள்ளது. பணிக்குழு  தலைவர் பதவியில் இருந்த, மேயர் ஆதரவு கவுன்சிலர் சுரேஷ் பணிகள் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்காரணமாக பணிகள் குழு தலைவர் பதவி காலியானது. இந்தநிலையில் பணிக்குழு தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் தலைமையில் நடைபெற்றது.




 


காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் பதவியை ராஜினாமா செய்த கவுன்சிலர் தவிர மற்ற ஐந்து கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற தேர்தலில் திமுக மேயர் எதிர்ப்பு கவுன்சிலர் கார்த்தி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பணிகள் குழு தலைவருக்கு, மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் மற்றும் மேயர் எதிர்ப்பு கவுன்சிலர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். மேயர் எதிர்ப்பு கவுன்சிலர்களுக்கு இது முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.


 




 மேயர் தரப்புக்கு சிக்கல்


அடுத்த சில நாட்களில் மாநகராட்சி கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக உள்ள மகாலட்சுமி யுவராஜ், குறைந்தபட்சம் 17 கவுன்சிலர்களின் ஆதரவுடன் மாநகராட்சி தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்தநிலையில் மேயர் எதிர்ப்பு தரப்பு கவுன்சிலர் பணிக்குழு உறுப்பினர் பதவியை கைப்பற்றி இருப்பது, மேயருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது