காஞ்சிபுரம் ஏகாம்பரம்நாதர் கோயிலில் டிசம்பர் 08 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், ஆயிரம் கால் மண்டபம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பல்லவர் காலத்தில் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாத சுவாமி கோயில் பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில், ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோயிலில் சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, இக்கோவில் முதல் கட்டுமானங்கள் கி.பி., 600 ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
பல்லவர் காலம் முதல் இந்த கோவில் பிரசித்தி பெற்றதாக இருந்து வருகிறது. அதே போன்று நாயக்க மன்னர்கள் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணி செய்துள்ளனர். பல்வேறு மன்னர்கள் திருப்பணி செய்ததற்கான, ஆதாரமாக கல்வெட்டுக்கள் சான்றுகளாக கிடைத்துள்ளன. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில், பெரிய ராஜகோபுரம் மன்னர் கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
தெற்கு ராஜகோபுரம், பல்லவ கோபுரம், மேற்கு கோபுரம் என 3 வகை ராஜகோபுரங்கள் இருப்பது மிகவும் பிரசித்தி பெற்றதாக பார்க்கப்படுகிறது. கிழக்குத்திசை நோக்கி இருக்கும் ஏகாம்பரநாதர் சந்நிதியில் மூலவராக மணல் லிங்கமாக சுயம்புவாக ஏகாம்பர நாதர் அருள்பாலிக்கிறார். கோயில் உட்புறத்தில் சிவகங்கை குளம் மற்றும், கம்பா தீர்த்த குளம் உள்ளது. கோயிலுக்கு வெளிப்பகுதியில் சர்வதீர்த்தமும், மங்கள தீர்த்தமும் உள்ளன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் ஏகாம்பாநாதர் கோயிலில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்தநிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் துவங்கி நடைபெற்ற வருகின்றன. கும்பாபிஷேக திருப்பணி செய்ய தமிழக அரசு ரூ.18 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. கோயில் திருப்பணிப்புகள் வேகமான நடைபெற்ற வருகின்றன.
1000 கால் மண்டபம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபம், கோயிலின் நான்காம் பிரகாரத்தில் அமைந்துள்ளது. இது விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டது. வருகின்ற டிசம்பர் மாதம் 08 ஆம் தேதி கும்பாபிஷேக பணியில் நடைபெற உள்ள நிலையில், 1000 கால் மண்டபம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பங்குனி உத்திர திருக்கல்யாணத்தின் போது ஏகாம்பரநாதர் வீதியுலா செல்ல இந்த ஆயிரங்கால் மண்டபத்தின் வழியாகவே வெளியில் வருவார். கும்பாபிஷேகம் நடைபெறும் உள்ளது நிலையில், ஆயிரம் கால் மண்டபம் பொன்னரமைக்கப்பட்டு வருகிறது.