காஞ்சிபுரம் பிரசித்தி பெற்ற கட்சி ஒரு கோவிலில், நவம்பர் 19ஆம் தேதி முதல் முக்கிய திருவிழாக்கள் நடைபெற உள்ளது. கார்த்திகை மாதம் கடை ஞாயிறு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் (Kanchipuram Kachabeswarar Temple )
காஞ்சிபுரம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக இருக்கக்கூடிய காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் விளங்கி வருகிறது. இந்தக் கோயில் "கச்சபேசம்" எனவும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலைப்பற்றி காஞ்சிபுரம் புராணத்தில் தனி படலமாக அமையப்பெற்று இருப்பது கூடுதல் சிறப்பாக உள்ளது . கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழில் இயற்றப்பட்ட தண்டியலங்காரம் என்ற இலக்கண நூலில் பாடப்பட்டுள்ளது.
அமிர்தம் எடுப்பதற்காக, பாற்கடலை கடைந்த பொழுது மத்தாக பயன்படுத்தப்பட்ட மந்திர மலை கடலில், மூழ்கிக் கொண்டிருந்தது. இதனால் அமிர்தம் கிடைக்காமல் பணி தடைபடும் அபாயம் இருந்தது. இதனால் மகாவிஷ்ணு ஆமை அவதாரம் எடுத்தார். மந்திர மலையை தாங்கி பிடித்து பணி நிறைவடைய உதவி புரிந்தார். இதனால் திருமாலுக்கு செருக்கு உண்டாகியதாக கூறப்படுகிறது.
உலகம் அழியும் வகையில் இதனால் உலகம் அழியும் வகையில், கடலை கலக்கியதால் சிவபெருமான் கோபம் அடைந்துள்ளார். சிவபெருமான் ஆமை ஓட்டினை, வென்டக மலையனிடையே மறைத்து வைத்துள்ளார் அதன் பிறகு, தனது தவறை உணர்ந்து. இதனை அடுத்து திருமால் ஆமை வடிவத்தில் சிவனை வழிபட்டுள்ளார்.
திருவிழாக்கள் நிறைந்த கார்த்திகை மாதம்
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில், கார்த்திகை மாதங்களில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடை ஞாயிறு என்ற விழா நடைபெற்று வருகிறது. அத்தினங்களில் மண்டை விளக்கு ஏற்றி திருக்கோவிலை சுற்றி வர தலைவலி, காதுவலி, காதில் சீழ்வடிதல், தலைக்குத்து போன்றவை நீங்கும் என்பது ஐதீகம். கோவிலில் உள்ள இஷ்டசித்தி தீர்த்தக் குளத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தலை முழுகினால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. கார்த்திகை மாதம் மூன்று நாட்கள் நடைபெறும் தெப்பத் உற்சவம் மிக விமர்சியாக கொண்டாடப்படும்.
தெப்பத் உற்சவம் மற்றும் கடை ஞாயிறு திருவிழா எப்போது ?
கார்த்திகை மாதம் தெப்ப உற்சவம் முதல் நாள் - 19-11-2025
கார்த்திகை மாதம் தெப்ப உற்சவம் இரண்டாம் நாள் - 20-11-2025
கார்த்திகை மாதம் தெப்ப உற்சவம் மூன்றாவது நாள் - 21-11-2025
கார்த்திகை கடை ஞாயிறு விழா 1-ஆம் நாள் - 23-11-2025
கார்த்திகை கடை ஞாயிறு விழா 2-ஆம் நாள் - 30-11-2025
கார்த்திகை கடை ஞாயிறு விழா 3-ஆம் நாள் - 07-12-2025
கார்த்திகை கடை ஞாயிறு விழா 4-ஆம் நாள் - 14-12-2025
கார்த்திகை கடை ஞாயிறு விழா 5 -ஆம் நாள் - 21-12-2025
ஆரூரா தரிசனம் - 03-01-2026 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.