தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித்தேர்வுகள் மற்றும் SSC,RRB& BANKING (IBPS ) போன்றமத்திய அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவசபயிற்சிககள் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.

Continues below advertisement

 இலவச பயிற்சி வகுப்புகள்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கும் மற்றும் SSC, RRB & BANKING (IBPS) போன்ற மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த போட்டித் தேர்வாளர்கள் பயனடையும் வகையில் காஞ்சிபுரம், மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் 12.11.2025 முதல் துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.        

Continues below advertisement

தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் என்ன?

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக் கொள்ளவும், மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணை தொடர்புகொண்டு பயனடையுமாறும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.