காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு தீவிர திருத்தம், 2025 கணக்கெடுப்பு படிவங்கள் 2025, நவம்பர் 4-ந் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு தற்போது வரை 86.82% படிவங்கள் வழங்கி முடிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision) 

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision) பணியானது நடைபெற்று வருகின்றது. இச்சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிக்காக வாக்காளர் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், புகைப்படம் அச்சடிக்கப்பட்ட வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று நவம்பர் 4-ந்தேதி முதல் வழங்கி வருகின்றனர்.

காஞ்சிபுரம் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் நிலவரம் என்ன ?

இப்பணிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1401 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் அவர்களை கண்காணிக்க 145 மேற்பார்வையாளர்களும் (BLO Supervisors), 145 கூடுதல் மேற்பார்வையாளர்களும் (Additional BLO Supervisiors) , மற்றும் மண்டல வாரியாக துணை ஆட்சியர் நிலையில் 10 கண்காணிப்பு அலுவலர்களும் (Nodal Officers) மற்றும் இதர பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க 4 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 11 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்ளனர். 

Continues below advertisement

இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1228816 வாக்காளர்கள் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 172382 படிவங்கள் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள முகவரியில் இல்லாத காரணத்தால் உரிய நபர்களுக்கு சென்றடையாத நிலை ஏற்பட்டுள்ளது. மேற்படி கணக்கெடுப்பு பணியானது 04.11.2025 முதல் 04.12.2025 வரை மேற்கொள்ளப்படும். எனவே, கணக்கெடுப்பு படிவங்கள் இதுவரை பெறாத வாக்காளர்கள் சம்மந்தப்பட்ட தொகுதியின் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை தொடர்பு கொண்டு படிவங்களை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் என்ன ?

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் விவரங்களை அறிய மாவட்ட தொடர்பு மையம் மற்றும் மாவட்ட உதவி மையத்தின் 044-1950 மற்றும் 044-27237107 ஆகிய தொலைபேசி எண்களில் அல்லது சம்மந்தப்பட்ட தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர் மேற்பார்வையாளர்கள் (BLO Supervisiors) விவரங்களை https://elections.tn.gov.in/Elections.aspx என்ற இணையதள முகவரியிலும் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் விவரங்களை https://www.erolls.tn.gov.in/blo/ என்ற இணையதள முகவரியிலும் காணலாம்.

சட்டமன்ற தொகுதிகளின் உதவி மைய எண்கள் கீழ்கண்டவாறு:

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி - 044 - 22320980

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி - 044 -27162231

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி- 044- 27272230

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி - 9080000851.