காஞ்சிபுரம் மாநகராட்சியில் புதிதாக 11 ஊராட்சிகள் இணைய உள்ளன. இதன் மூலம் காஞ்சிபுரம் மாநகராட்சி மக்கள் தொகை 2.84 லட்சமாக உயர்ந்துள்ளது 


தமிழ்நாடு அரசு மாநகராட்சி, நகராட்சி, புதிதாக தோற்றுவிக்கப்பட்ட நகராட்சிகள் மற்றும் மாநகராட்சியுடன் உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க உள்ளனர். இதன் மூலம் நகராட்சி மற்றும் மாநகராட்சி எல்லைப் பரப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 


காஞ்சிபுரம் மாநகராட்சி - Kanchipuram Corporation 


தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில் ஒன்றாக காஞ்சிபுரம் மாநகராட்சி இருந்து வருகிறது. நகராட்சியாக இருந்த காஞ்சிபுரம் கடந்த 2021 ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இது 36.14 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இம்மாநகராட்சி 51 மாமன்ற உறுப்பினர்களைக் கொண்டது. தற்போது காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் பதவி வகித்து வருகிறார். காஞ்சிபுரம் மாநகராட்சியில் சுமார் ‌2.32 மக்கள் தற்போது வசித்து வருகின்றனர். இந்தநிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி, எல்லை விரிவுபடுத்தப்பட உள்ளது. புதிதாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் 11 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, மாநகராட்சியின் எல்லை விரிவுபடுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 


இணையும் ஊராட்சிகள் என்னென்ன ?


கோனேரிகுப்பம் ஊராட்சி ( மக்கள் தொகை 11406, 18.06 சதுர கிலோ மீட்டர் ), திருப்பதிக்குன்றம் ( மக்கள் தொகை 1957, 2 சதுர கிலோ மீட்டர்) கருப்படைத்தட்டை ( மக்கள் தொகை 2244, 1.77 சதுர கிலோ மீட்டர்) கீழ்கதீர்பூர் ஊராட்சி ( மக்கள் தொகை 2299 , 6.31 சதுர கிலோ மீட்டர் ) சிறு காவேரிப்பாக்கம் ( மக்கள் தொகை 8032, 4.33 சதுர கிலோ மீட்டர் ), திம்மசமுத்திரம் ( மக்கள் தொகை 4534, 7.78 சதுர கிலோ மீட்டர் ) , கீழம்பி ( மக்கள் தொகை 5058, 9.48 சதுர கிலோ மீட்டர் ) புத்தேரி ( மக்கள் தொகை 3677 , 4.94 சதுர கிலோ மீட்டர் ) கலியனூர் ( மக்கள் தொகை 1834, 3.34 சதுர கிலோ மீட்டர் ) வையாவூர் ( மக்கள் தொகை 4173, 6.34 சதுர கிலோ மீட்டர் ), ஏனாத்தூர் ( மக்கள் தொகை 6531, 11.91 சதுர கிலோ மீட்டர் ) ஆகிய கிராமங்கள் காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணை உள்ளன


விரிவடையும் மாநகராட்சி


ஊராட்சிகள் இணைவது மூலம் காஞ்சிபுரம் மாநகராட்சியில் கூட மக்கள் தொகை 51 ஆயிரத்து 745 சேர உள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சியின் பரப்பளவு 76.26 சதுர கிலோ மீட்டர் இணைவதால் காஞ்சிபுரம் மாநகராட்சியின் மக்கள் தொகை இரண்டு லட்சத்து 84 ஆயிரத்து 561 ஆக உயர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சி பரப்பளவு 112.40 சதுர கிலோமீட்டர் ஆக உயர உள்ளது.


ஊராட்சிகள் இணைப்பு எப்போது ?


ஊராட்சிகள் இணைப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் முறையாக வெளியிடப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன. ஊராட்சிகள் இணைப்பு என்பது மாநகராட்சி பிரிக்கும்போது முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019 ஆம் ஆண்டு ஊராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில், பதவி காலம் முடிவடைய உள்ளதால் அதன் பிறகு மாநகராட்சியுடன் இணைக்கும் பணிகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 


மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைக்கப்படுவதால், மாநகராட்சியில் எல்லை அதிகரிப்பதால், மாநகராட்சிக்கு வருவாய் பெருகும். காஞ்சிபுரம் மாநகராட்சி வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால், மாநகராட்சி சுற்றியும் வளர்ச்சியை பெருக்க உதவும். மேலும் குடிநீர், தூய்மை பணி உள்ளிட்டவை முறையாக நடைபெறும். மாநகராட்சியுடன் இணைவதால், சொத்து வரி உள்ளிட்டவை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஜனவரி மாதத்தில் இதற்கான பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.