உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளுக்கும் எனது செல்போனில் நீங்கள் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என "நான் முதல்வன்- உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் தனது செல்போன் எண்ணை வழங்கி மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


 


நான் முதல்வன் – உயர்வுக்கு படி நிகழ்ச்சி


 


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில், “நான் முதல்வன்” – உயர்வுக்கு படி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ மாணவிகள்/ பெற்றோர்கள் முன்னிலையில் சிறப்புரையாற்றி பேசிய மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். 




 


ஒரே பாட்டில் சாதிக்க முடியாது..


பள்ளி மாணவ மாணவிகள் முன்னிலையில் பேசிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கூறுகையில் , சினிமா படங்களில் வரும் ஒரே பாட்டிலே பணக்காரனாகிவிடலாம் என்பது போல் எல்லாம் வாழ்க்கை கிடையாது, அனைத்திற்கும் நாம் கஷ்டப்பட வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும், சாமர்த்தியமாக வேலை செய்ய வேண்டும், அடுத்தவர்களை ஏமாற்றினால் அது குறுகிய காலம் மட்டுமே நிலைக்கும், நீண்ட காலத்திற்கு நிலைக்காது.


கடினமாக உழைக்க வேண்டும்


அதற்கு நாம் கடினமாக உழைக்க வேண்டும், சரியான வேலையும் செய்ய வேண்டும் அதற்கு உலக அறிவு முதலில் வேண்டும், நமது மொபைல் ஃபோனிலோ,சமூக வலைத்தளங்களிலோ இந்த உலக அறிவு கிடைத்துவிடாது. அதற்கு உயர் கல்வியை நாம் படிக்க வேண்டும், உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உங்களது பெற்றோர் இடத்திலோ ஆசிரியர்களும் இல்லை ஏன் எண்ணில் கூட நீங்கள் கேட்டுப் பெறலாம் என தெரிவித்தார்.




 


செல்போன் எண்ணை பகிர்ந்த மாவட்ட ஆட்சியர்


மேலும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செல்போன் எண்ணை தெரிவித்து, உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மாணவ/மாணவியர்கள் தலைசிறந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் மூலம் உயர் கல்வி வழிகாட்டுதல் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொண்டு அனைத்து மாணவர்களும் வாழ்க்கையில் வெற்றி பெறுமாறு கேட்டுக் கொண்டார்.


உயர் கல்வி வழிகாட்டும் நலத்திட்டங்கள்


மேலும் உயர் கல்வி படிக்க வழிவகை செய்யும் வகையில் கல்வி கடன் வசதிகள் பல்வேறு துறைகளால் வழங்கப்படும். கல்வி உதவித் தொகைகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் , தற்போது உள்ள காலி இடங்களுக்கான நேரடி சேர்க்கை மற்றும் உயர் கல்வி வழிகாட்டி, ஆளுமைகள் மூலம் வழிகாட்டுதல் உட்பட அரசின் பல்வேறு உயர் கல்வி வழிகாட்டும் நலத்திட்டங்கள் தொடர்பான அரங்குகள் அமைத்து பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.


 




இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.வெற்றிச்செல்வி, அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ /மாணவியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துக் கொண்டனர். மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் மிகவும் சகஜமாக பேசி, பள்ளி மாணவர்களுக்கு  புரியும் வகையில்   ஆட்சியர் எடுத்துக் கூறியது, பெற்றோர்கள் இடயே மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது .