" உயிர் போனாலும், நிலத்தை விட மாட்டோம் " - படையெடுத்த கிராம மக்கள்.. பரந்தூர் விமான நிலையம் நிலை என்ன ? 

நிலம் எடுப்பு அறிவிப்பு வெளியான நிலையில் ஏகனாபுரம் கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் விமான நிலைய திட்ட நிலம் எடுப்பு அலுவலகத்தில் ஆட்சேபனை மனு வழங்கினார்கள்.

Continues below advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரப் 20 கிராம பகுதிகளை உள்ளடக்கிய, பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் விமான நிலையம் அமைக்க தேவையான நிலங்கள் எந்தெந்த கிராமங்களில், எவ்வளவு எடுக்கப்படுகிறது என வரையறுத்து நில எடுப்பு அறிவிப்புகளை தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அறிவிப்புகளை நாளிதழ்களில் வெளியிட்டு வந்தது.

Continues below advertisement

 


தொடர் போராட்டம் 

விமான நிலையம் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் தங்கள் விவசாய நிலங்கள் குடியிருப்புகள் நீர்நிலைகள் உள்ளிட்ட வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படுவதாக கூறி விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாள்தோறும் கிராம மைதானத்தில் ஒன்று கூடி 791 வது நாளாக தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

 


 

தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் தற்பொழுது ஏகனாபுரத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை நாளிதழ்களில் இன்று வெளியிட்டு உள்ளது. ஏகனாபுரத்தில் உள்ள நிலங்களின் வகைகள் சர்வே எண்கள் கிராம மக்களின் பெயர்கள் உள்ளிட்டவை குறிப்பிட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு

அதன்படி ஏகனாபுரம் கிராமத்தில் 152.95 ஏக்கர் பரப்பளவிலான 6,19,250 சதுர மீட்டர் நிலத்தை கையகப்படுத்த உள்ளனர்.

நில எடுப்பது குறித்து ஆட்சேபனை இருந்தால் 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது . இதனைத் தொடர்ந்து ஏகாம்பரம் கிராம கிராமத்தில் இரண்டாவது கட்டமாக 234 ஏக்கர் பரப்பளவில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகிறது ‌. 

 

படையெடுத்த கிராம மக்கள்

இந்த அறிவிப்பு ஏகனாபுரம் கிராம மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உனள்ளது. அறிவிப்பு வெளியான போது ஏகனாபுரம் கிராம மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காரை பகுதியில் உள்ள தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) அலுவலகம் மண்டலம் என்ற இரண்டில், பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, நிலம் வழங்க மாட்டோம் என ஆட்சேபனை மனுக்களைவழங்கி வருகிறார்கள். கிராம மக்கள் வருகையை ஒட்டி காரை பகுதியில் உள்ள நிலை எடுப்பு அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


 

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் கிராம மக்களின் ஒரே குறிக்கோள், ஏகனாபுரம் பகுதியில் விமான நிலையம் அமைக்க கூடாது என்பதுதான். ஏற்கனவே விமானம் அமைப்பதற்கு பன்னூர் பகுதி உகந்த இடமாக உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் விமான நிலையத்தால் பாதிப்படைகின்றன. ஆனால் பன்னூர் பகுதியில் 250 குடியிருப்பு பகுதிகள் தான் பாதிப்படைவதாக அரசை கூறுகிறது. எனவே எங்கள் நிலத்தில் விமான நிலையம் அமைப்பதை அரசு கைவிட வேண்டும் என தெரிவித்தனர்.

Continues below advertisement