கத்திரி வெயில் வெப்பம் வாட்டி வந்த நிலையில் காஞ்சிபுரத்தில் திடீரென கருமேகம் சூழ்ந்து 30 நிமிட கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
கோடை வெப்பம்
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாகவே கடும் கோடை வெப்பம் போல் அனல் காற்று வீசி சிறுவர் முதல் மூத்த குடிமக்கள் வரை பெரிதும் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து வெப்ப அலை வீசப்படும் எனவும் கத்திரி வெயில் துவக்கத்தில் சில நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கு என வானிலை மண்டலம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் நேற்று லேசான மழை காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பெய்தது.
குளிர் காற்று
இந்நிலையில் இன்று காலை முதலே காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் லேசான மேகமூட்டத்துடன் குளிர் காற்று வீச துவங்கியது. இதனைத் தொடர்ந்து ஒரு மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்யத் துவங்கி மெல்ல மெல்ல கனமழையாக 30 நிமிடம் நீடித்தது. திடீர் கனமழையை எதிர்பாராத வாகன ஓட்டிகள் மழையில் இருந்து விலகி சாலையோர கடைகள் குடியிருப்பு பகுதிகள் என பல பகுதிகள் தஞ்சம் அடைந்தனர்.
30 நிமிட கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
தொடர்ந்து 30 நிமிட கனமழை
தொடர்ந்து 30 நிமிட கனமழையால் பொதுமக்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயப் பணி துவக்கி உள்ள விவசாயிகளும் தங்களது விவசாய பணிகளை துவக்கி இருந்த நிலையில் இந்த மழை அவர்களுக்கு பெரிதும் உதவும் என்பதால் மகிழ்ச்சியுற்றுள்ளனர். காஞ்சிபுரம், செவிலிமேடு, வாலாஜாபாத், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
30 நிமிட கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
வானிலை நிலவரம்
நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக கத்திரி வெயிலின்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. அதேபோல், வெப்ப அலையும் குறைந்துள்ளது. அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்கியது முதலே நல்ல மழை பதிவாகி வருகிறது.
30 நிமிட கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
இந்நிலையில் இன்று, தென் மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும் என்றும், கன்னியாகுமரி, தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை இருக்கும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதே சமயம், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.