தமிழகம் முழுவதும் பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் 86.98% பெற்று மாநிலத்தில் 33வது இடத்தில் உள்ளது.


அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 85.75 ஆக உள்ளது. தனியார் பள்ளிகளில் 98.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவிபெறும் பள்ளிகளில் 92.36 சதவீதம் பேர் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


இருபாலர் பள்ளிகளில் 91.61 % பேரும் பெண்கள் பள்ளிகளில், 94.46% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். எனினும் ஆண்கள் பள்ளியில் தேர்ச்சி வீதம் 81.37 எனக் குறைவாகவே உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தத் தேர்ச்சி 91.17 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.24 சதவீதம் அதிகம் ஆகும். 2023ஆம் ஆண்டு, 90.93 சதவீதம் பேர் பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெற்று இருந்தனர்.


காஞ்சிபுரம் மாவட்ட தேர்வு முடிவுகள்



தமிழகம் முழுவதும் பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் 86.98% பெற்று மாநிலத்தில் 33 வது இடத்தில் உள்ளது. 6676 மாணவர்களும் 7346 மாணவிகள் என மொத்தம் 14,022 பேர் தேர்வு எழுதிய நிலையில், 5429 மாணவர்களும் , 6767 மாணவிகள் என மொத்தம் 12,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 81.32 சதவீதமும், மாணவிகள் 92.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

அரசு பள்ளிகளை பொறுத்தவரை 7816 பேர் தேர்வு எழுதிய நிலையில், 6377 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள் 81.59 %தேர்ச்சி. மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் 32 இடம் பிடித்ததுள்ளது. கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு +1 தேர்வில் காஞ்சிபுரம் மாவட்டம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டம் அரசு  பள்ளிகள் தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 52 அரசு பள்ளிகளை சேர்ந்த 321 மாணவர்களும் 4606 மாணவிகளும் தேர்வு எழுதி இருந்தனர். மொத்தம் 7816 பேர் தேர்வு எழுதியிருந்தனர். இதில் தேர்வில் எழுதிய 2315 மாணவர்களும் 462 மாணவிகளும் மொத்தம் 6377 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.  மாணவர்களின் பேச்சு சதவீதம் 72.12 ஆகவும் , மாணவிகளின் தேர்ச்சி சதவீதம்  88.19 ஆகவும் உள்ளது. மொத்தம் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 81.59 சதவீதம். மாநில அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் 32வது இடம் பிடித்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடிப்படையிலும் காஞ்சிபுரம் பின்தங்கிய மாவட்டமாக இருந்த நிலையில் தற்போது 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளிலும் காஞ்சிபுரம் பின்தங்கியுள்ளது.