"காஞ்சிபுரத்தில் உள்ள நத்தப்பேட்டை ஏரியை பாதுகாக்க வேண்டும், என அன்புமணி ராமதாஸ் மக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்"
அன்புமணி ராமதாஸ் நடைபயணம்
தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணம் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டு வருகிறார். மூன்றாவது நாளாக இன்று காஞ்சிபுர சட்டமன்ற பகுதியில் நடை பயணம் மேற்கொண்டார். முன்னதாக காஞ்சிபுரம் நத்தப்பேட்டை மற்றும் வையாவூர் ஏரிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் நத்தப்பேட்டை ஏரியை காப்பாற்ற வேண்டும், அதை சதுப்பு நிலமாக அறிவிக்க வேண்டும் என கூறி கிராம மக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
காஞ்சிபுரம் நத்தப்பேட்டை ஏரி
தொடர்ந்து ஏரியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய அவர், ஏரிகள் மிகுந்த மாசு அடைந்ததாகும் கழிவுநீர் கலந்திருப்பது ஆகும் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஏரிகள் மன்னர் காலத்தில் கட்டப்பட்டவை, இதை நாம் பாதுகாக்க வேண்டும். தற்போது தமிழகத்தில் வெறும் 14000 ஏரிகள் மட்டும் தான் உள்ளது.
அதிகாரிகளுக்கு ஒரு பாட்டில் கொடுங்கள்
காலங்காலமாக அது நம்முடன் இருக்கக்கூடியது, ஆகவே இவைகளை நாம் பாதுகாக்க வேண்டும் அப்படி பாதுகாக்கவில்லை என்றால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. இந்த மாசடைந்த இந்த பாட்டில் தண்ணீரை மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஒரு பாட்டில் குடுங்க கலெக்டர் உள்பட அதிகாரிகளுக்கு ஒரு பாட்டில் கொடுங்கள் என்று ஆவேசமாக பேசினார்.
அப்போதுதான் இந்த ஏரி நிலைமை அவர்களுக்கு புரியும். இந்த ஏரியில் ஆஸ்திரேலியா பெலிக்கன் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு பறவைகள் தற்போதும் இருக்கின்றன. பறவைகள் வலசை காலங்களில் இவை அதிகளவு வருவதாகவும் தெரிவித்தார் வருங்காலத்தில் இந்த ஏரிகளை காக்க காஞ்சிபுரம் பகுதியில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி பாதுகாப்போம் என்று தெரிவித்தார். தொடர்ந்து இந்த ஏரியில் வெளிநாட்டு பறவைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. வேடந்தாங்கலை போல் பறவைகள் வரும் ஏரியாக இருக்கிறது, எனவே இந்த ஏரியை பாதுகாத்து பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.
புகைப்படம் எடுத்த அன்புமணி ராமதாஸ்
இதனைத் தொடர்ந்து, வையாவூர் ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். அங்கே ஆஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்த Flamingo பறவைகளை ஊடக நண்பர்களின் கேமராவில் அழகாக படம் பிடித்து. இந்த நாட்டுப் பறவைகள் எல்லாம் இவ்வளவு தூரம் வருவது அதிசயமான ஒன்று என தெரிவித்தார்.
அப்போது அக்கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார், "எங்கள் ஏரி ஒரு காலத்தில் நன்றாக இருந்தது. ஆடி மாதம் இந்த ஏரியில் இருந்து தண்ணீரை எடுத்து பொங்கல் வைத்திருக்கிறோம்.
ஆனால் காஞ்சிபுரம் மாநகராட்சியில் இருந்து எப்போது கழிவுநீர் வர தொடங்கியதோ, அப்போதிலிருந்து இந்த ஏரி நாசமாகி வருகிறது. இதனால் இப்போது இந்த ஏரி நீர் நாசமாகி பயன்படுத்த முடியாத சூழல் இருக்கிறது. நீங்கள்தான் எப்படியாவது எங்கள் ஊர் ஏரியை காப்பாற்ற வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.
அன்புமணியை கொஞ்சிய மூதாட்டி
அப்போது அன்புமணி ராமதாஸிற்கு சுத்தி போட்டு நட்டை உடைத்த மூதாட்டி, உங்களை டிவியில் பலமுறை பார்க்கிறேன். இப்போதுதான் நேரில் பார்க்கிறேன் 'செல்லம்' என கொஞ்சியது அங்கு இருந்த, கட்சியினை பொதுமக்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.