காஞ்சிபுரம் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. வரலாற்று ரீதியிலும் முக்கியத்துவம் பெற்ற நகரங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் இருந்து வருகிறது. அதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலை நிறைந்த மாவட்டமாகவும் உருவெடுத்துள்ளது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டம் ஏற்றுமதியில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த அசத்தி வருகிறது. 

மின்சாதன பொருட்கள் உற்பத்தி செய்வதிலும், காஞ்சிபுரம் இந்திய அளவில் முன்னணி மாவட்டமாக இருந்து வருகிறது. வரலாற்று ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் முன்னணி மாவட்டமாக இருந்து வரும் காஞ்சிபுரத்தில் பல மாவட்ட மற்றும் பல மாநில நிலங்களை சேர்ந்த வெளியூர் நபர்கள் காஞ்சிபுரத்தில் தங்கி வேலை செய்து வருகின்றனர். பல்வேறு துறைகளில் காஞ்சிபுரம் மாவட்டம் முன்னிலையில் இருந்து வரும் நிலையில், திருமணத்தைத் தாண்டி உறவில் இருப்பவர்களின் எண்ணிக்கையில் இந்திய அளவில் காஞ்சிபுரம் முதலிடம் பிடித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Ashley Madison - டேட்டிங் செயலி

திருமணத்தைத் தாண்டி கள்ள உறவில் இருப்பது என்பது உலகம் முழுவதும் இருக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது. சமீப காலமாக கள்ளக்காதல் விவகாரங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், கள்ளக்காதலால் கொலை சம்பவங்கள் கூட நடைபெறுகின்றன. கள்ளக்காதல் என்பது, கணவன்- மனைவி உறவு கொள் நடக்கும் துரோகமாக பார்க்கப்படுகிறது.

காலகட்டத்திற்கு ஏற்ப கள்ளக்காதல் என்பது அதிகரித்துதான் வருகிறது. இன்றைய சூழலில் நவீன செயலிகளை பயன்படுத்தி, கள்ள உறவில் ஈடுபருபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் Ashley Madison என்ற செயலி வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கள்ள உறவு அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.

கள்ளக்காதலில் முதலிடம் பிடித்த காஞ்சிபுரம்

இந்தியாவில் திருமணத்தை மீறிய கள்ள உறவு குறித்த, டேட்டாக்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் மாத அடிப்படையில் இந்தியாவிலேயே காஞ்சிபுரத்தில் தான் இந்த செயலியை அதிகமானவர்கள் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் திருமணத்தை மீறி, கள்ளக்காதலில் ஈடுபடுபவர்களில் புள்ளி விவரத்தின் படி காஞ்சிபுரம் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் 17 வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது முதலிடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் கட்ட நகரங்களில் அதிகரிப்பு 

கள்ளக்காதல் விவகாரம் என்பது பொதுவாக பலரும் பெருநகரங்களில் சர்வ சாதாரணமாக நடக்கும் என நினைப்போம். ஆனால் இந்தத் தகவல்களின் அடிப்படையில், இந்திய அளவில் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் தான் இந்த செயலியின் பயன்பாடு அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் தான் கள்ளக்காதல் அதிகமாக செய்யப்படுவதாக தெரிகிறது. உதாரணத்திற்கு மும்பை முதல் 20 இடத்தை பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.