உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான கல்யாண் சிங் இன்று காலமானார். அவருக்கு வயது 89.


கடந்த ஜூலை மாதம் முதல் உடல்நிலைக் குறைபாடு காரணமாக அவதிப்பட்டு வந்த கல்யாண்சிங் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்தாலும் அவருக்கு சிறுநீரகக் கோளாறு, இதயக்கோளாறு, நரம்பியல் பிரச்னை இருந்தது.  தொடர் சிகிச்சையில் இருந்த கல்யாண் சிங், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்