யோகா என்பது கடினமான ஆசனங்களை செய்வதோ தியானம் செய்வதோ மட்டுமல்ல. நல்ல பயிற்சி பெற்ற யோகா ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி யோகாவை சரியாக செய்யும் பட்சத்தில் நம் உடலில் அது பல தாக்கங்களை ஏற்படுத்துகிறது. தியானிப்பது, மந்திரங்கள் ஓதுவது, பிரார்த்தனை மேற்கொள்வது, மூச்சு பயிற்சி செய்வது, தன்னலமற்ற செயல் செய்வது உள்பட சுய ஒழுக்கம் சார்ந்த நடைமுறைகள் அடங்கியதே யோகாவாகும். 




யுஜ் என்ற வார்த்தையிலிருந்தே யோகா என்ற வார்த்தை மறுவி வந்துள்ளது. இதற்கு ஒருங்கிணைப்பது என்ற பொருள் உண்டு. இதற்கு பல அர்த்தங்கள் தரப்படுகின்றன. ஆனால், அனைத்தையும் தொடர்புப்படுத்துவது ஒருங்கிணைப்பு என்ற வார்த்தையே ஆகும். ஆசனங்கள், உடற் பயிற்சி ஆகியவற்றை மேற்கோள் காட்டுவதற்கே யோகாசனம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.




யோகாவின் பல பலன்களை கீழே காண்போம்:


உடலின் நெகிழ்வுத்தன்மை அதிகப்படுத்தப்படுகிறது


யோகாசனங்களை பயிற்சி செய்வதன் முக்கிய பலனே உடலை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்து கொள்வதாகும். கால போக்கில், உடலின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கிறது என அமெரிக்க சுகாதார அமைப்பு கூறுகிறது.


நெகிழ்வுத்தன்மை என்பது உடல் ஆரோக்கியத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். மேலும், அதில் பல்வேறு பாணிகள் உள்ளன. அவை அனைத்தும் அதிக அளவில் இருந்து மிதமானவை முதல் லேசானவை வரை அதன் தீவிரத்தில் வேறுபடுகின்றன. குறைந்த தீவிரத்தன்மை கொண்ட ஆசனங்கள் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கலாம்.


யோகா செய்வதன் மூலம் 65 மற்றும் அதற்கு மேலான வயதுடையவர்கள்  உடலில் நெகிழ்வுத்தன்மை மேம்படுகிறது. இந்த வயதில் இருப்பவர்களுக்கு, கால போக்கில், நெகிழ்வுத்தன்மை குறைவதால் பாதிப்படைகின்றனர். யோகா செய்வதன் மூலம் இந்த குறைபாடு குறைகிறது. 




மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவி செய்தல்


நீண்ட காலமாக மன அழுத்த பிரச்னையால் பாதிப்படைந்தவர்கள், யோகா செய்வதன் மூலம் அதிலிருந்து விடுபடுகிறார்கள். அதில், 84 சதவிகித வயதான அமெரிக்கர்கள் நேர்மறையான முடிவுகளை பெற்றுள்ளனர் என அமெரிக்க உளவியல் சங்கத்தின் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.


யோகாவின் ஒரு முக்கிய அங்கமாக உடற்பயிற்சி இருக்கிறது. தியானம், மூச்சுப்பயிற்சி மற்றும் செவிவழி மேம்படுத்துவதற்கான பயிற்சிகள், மந்திரம் ஓதுதல் மற்றும் ஒலி குளியல் போன்றவை பதற்றத்தைக் குறைத்து மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.


கவலையை குறைக்க உதவுகிறது


அமெரிக்காவில் அதிகமாக கவலை கொள்ளுதல் மிகவும் பொதுவான மனநல பிரச்சினைகளில் ஒன்றாகும். சமூகப் பதற்றம் மற்றும் குறிப்பிட்ட அச்ச உணர்வு பொதுவான கவலைக் கோளாறு பிரச்னைகளாக உள்ளன. நாள்பட்ட மன அழுத்தத்தை ஒரு கவலைக் கோளாறு என்றும் வகைப்படுத்தலாம்.


யோகாசனம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கவலைக் கோளாறுகளுக்கு மாற்று சிகிச்சையாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் ஆராய்ச்சி கூறுகிறது. யோகா நித்ரா, வழிகாட்டப்பட்ட தியானம் மக்களில் பதட்டத்தை குறைக்க பெருமளவில் உதவி செய்கிறது.




நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.


யோகா மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவுவது மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும், நாள்பட்ட மன அழுத்தம் நோயெதிர்ப்பு மண்டலத்தை எதிர்மறையாக பாதிக்கிறது.


பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி பல்வேறு சுகாதார நிலைமைகளின் ஆபத்தை அதிகரிக்கும். மன அழுத்தத்திற்கான மாற்று சிகிச்சையாக யோகா இருக்கிறது. மன அழுத்தத்தைத் தடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் என ஹெல்த்லைன் மேற்கொண்ட ஆராய்ச்சியின் மூலம் தெரிய வருகிறது.