வீட்ல விஷேசம் படத்தை பார்த்த வயதான பெண் ஒருவர் குலுங்கி குலுங்கி சிரிக்கும் வீடியோவை ஆர்.ஜே.பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். 


ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி உள்ளிட்ட பலரது நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம்.  “வீட்ல விஷேசம்”. இந்தப்படத்தை நடிகர் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து என்.ஜே.சரவணன் இயக்கி இருந்தார். வயது கடந்த காலத்தில் ஒரு பெண் கர்ப்பமானால் அவளை இந்தச் சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை அடிப்படையாக வைத்து இந்தப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 


 






ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்தப்படத்தின் பிரோமோஷனுக்காக ஆர்.ஜே.பாலாஜி தமிழ்நாடு முழுக்க பயணம் செய்து தியேட்டர்களில் விசிட் அடித்து வருகிறார். 




இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், ரசிகர் ஒருவர் படத்தை பார்த்துவிட்டு தனது அம்மா வயிறு குலுங்க சிரிப்பதை வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அதில் அவரது அம்மா வீட்ல விசேஷம் படத்தை பார்த்துவிட்டு சிரிப்பை அடக்க முடியாமல் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார். சிரித்து, சிரித்து ஒரு கட்டத்தில் வயிறு வலித்த நிலையில், அந்த அம்மா  “ அப்பா வயிறு வலிக்குதே..வயிறு வலிக்குதே..” என்று பேசுகிறார். ஜமாய் ஆர்.ஜே.பாலாஜி...!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண