இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்று சோமேட்டோ. இந்த நிறுவனம் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள கணக்கில் சில பதிவுகளை செய்து வருகிறது. அந்தப் பதிவுகள் வாடிக்கையாளர்களிடம் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு பதிவு ஒன்றை சோமேட்டோ நிறுவனம் தன்னுடையை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 


அதாவது சோமேட்டோ நிறுவனம் நம்முடைய பழமையான நினைவுகளை நினைவூட்டும் வகையில் ஒரு பதிவை செய்துள்ளது. அதில், “குக்கரில் 3 விசில் வந்தவுடன் அதை நிறுத்துவது நம்முடைய வேலையாக இருந்த போது வாழ்க்கை எவ்வளவு அழகாக இருந்தது” எனப் பதிவிட்டுள்ளது. சோமேட்டோ நிறுவனத்தின் இந்தப் பதிவை பலரும் ரசித்து வருகின்றனர். 


 






மேலும் பலரும் சோமேட்டோ பாணியில் தங்களுடைய மலரும் நினைவுகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் குறிப்பாக ஒருவர், “ஆர்குட் மட்டுமே ஒரே சமூக வலைதளமாக இருந்தபோது வாழ்க்கை மிகவும் அழகாக இருந்தது” எனப் பதிவிட்டுள்ளார். இவ்வாறு பலரும் இந்தப் பதிவு தொடர்பாக தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 




மேலும் படிக்க:தோழி தற்கொலையைத் தொடர்ந்து பிரபல மாடல் தூக்கிட்டு தற்கொலை.. என்ன நடக்கிறது?




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண