சொத்துக்குவிப்பு வழக்கில் ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம்பிரகாஷ் சவுதாலாக்கு 4 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஓம்பிரகாஷ் சவுதாலா குற்றவாளி என அறிவித்த நிலையில் டெல்லி சிபிஐ நீதிமன்றம் தண்டனை அறிவித்து உத்தரவிட்டது. 


மேலும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஓம்பிரகாஷ் சவுதாலாக்கு ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, 4 சொத்துகளையும் பறிமுதல் செய்யவும் டெல்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 


ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு எதிராக 2005ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிறப்பு சிபிஐ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (இன்று) தீர்ப்பு வழங்கியது. 


கடந்த 1996 - 2004 ஆம் ஆண்டு வரை ஹரியானா முதலமைச்சராக பதவி வகித்தபோது சொத்து குவித்ததாக சவுதாலா மீது சிபிஐ 2005 இல் வழக்குப் பதிவு செய்தது. மேலும் 1993 மற்றும் 2006 க்கு இடையில் தனது முறையான வருமானத்திற்கு அதிகமாக ரூ.6.09 கோடி சொத்துக்களை சவுதாலா குவித்ததாக குற்றம் சாட்டி மார்ச் 26, 2010 இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.


சவுதாலா குடும்பத்தினர் இந்த வழக்கை "அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை" என்று குற்றம் சாட்டினர். 2019 ஆம் ஆண்டில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) விதிகளின் கீழ், புது டெல்லி, பஞ்ச்குலா மற்றும் சிர்சாவில் உள்ள அவரது பிளாட் உட்பட ரூ.3.68 கோடி மதிப்புள்ள அவரது சொத்துக்களை அமலாக்க இயக்குனரகம் (ED) பறிமுதல் செய்தது.


சவுதாலா குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட இரண்டாவது வழக்கு இதுவாகும். இப்போது அவர் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். 


2013 ஆம் ஆண்டில், JBT ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு ஊழலில் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஊழல் குற்றச்சாட்டில் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், குற்றவியல் சதி குற்றச்சாட்டில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.


இந்த வழக்கில் தண்டனை முடிந்து கடந்த ஆண்டு ஜூலை 2ம் தேதி திகார் சிறையில் இருந்து சவுதாலா விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதிலிருந்து, சவுதாலா சுறுசுறுப்பாக இருந்தார் மற்றும் INLD ஐ புதுப்பிக்கும் முயற்சியில் ஹரியானாவின் கிராமப்புறங்களில் சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கினார்.


சவுதாலா ஹரியானாவில் ஏழு முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர். அதேபோல், ஜூலை 24, 1999 முதல் மார்ச் 5, 2005 வரை உட்பட நான்கு முறை முதலமைச்சராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


சவுதாலா எம்.எல்.ஏ-வாக பதவி வகித்த காலம் : 



  • மார்ச் 22, 1991 முதல் ஏப்ரல் 6, 1991 வரை

  • ஜூலை 12, 1990 முதல் ஜூலை 17, 1990 வரை

  • டிசம்பர் 2, 1989 முதல் மே 22, 1990 வரை எம்.எல்.ஏ-வாக பணியாற்றினார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண