சொமேட்டோ அதன் 10 நிமிட டெலிவரி திட்டமான பிலிங்கிட்-ஐ டெல்லியில் அதன் ஆப்பிலேயே சோதனை செய்து பார்த்துள்ளது. தற்போது ஒரு சில பகுதிகளில் மட்டுமே செயல்படும் இந்த வசதி விரைவில் டெல்லியில் உள்ள எல்லா பகுதிகளுக்கும் கிடைக்கும் என்று அந்த நிறுவனம் வெளியிட்ட செய்தியில் தெரியவந்துள்ளது.


சர்ச்சைகளை கடந்து வந்த சொமேட்டோ


உணவு வழங்கும் துறையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பணிப் பாதுகாப்பு என்பது அறவே இல்லை என்ற நிலையில், இந்த 10 நிமிட உணவு டெலிவரி மூலமாக சாலை விபத்துகள் அதிகரிக்கும் என்பதால், சொமேட்டோ நிறுவனம் 10 நிமிட உணவு டெலிவரி செய்யும் சொமேட்டோ இன்ஸ்டண்ட் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் பிரச்னைகளை சமாளித்த சொமேட்டோ நிறுவனம் தற்போது அதனை கொஞ்சம் கொஞ்சமாக அமல்படுத்தும் திட்டத்தை தொடங்கி உள்ளது.



குறைந்தபட்ச ஆர்டர் மதிப்பு


தற்போதைக்கு பிலிங்கிட் டெலிவரிக்கு குறைந்தபட்சம் 150 ரூபாய்க்கு ஆர்டர் செய்யவேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. சாதாரண டெலிவரிகளுக்கு 49 ரூபாய் குறைந்தபட்சமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பிலிங்கிட்-இன் குறைந்தபட்ச வரையரையும் பின்னர் மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.


தொடர்ND vs PAK: தர்மம் தோற்காதே ஆளும் காவலனே... ஹர்திக் பாண்ட்யாவிற்கு தலை வணங்கிய கார்த்திக்.. வைரல் படம்..


தீபிந்தர் கோயல் கடிதம்


"பிலிங்கிட் ஆப் தொடர்ந்து சுதந்திரமாக செயல்படும். டெலிவரி ஃப்ளீட் பின்-எண்டுகளை ஒருங்கிணைக்கும் பணியை நாங்கள் தொடங்குவோம், இது காலப்போக்கில் அதிக டெலிவரி செயல்திறனை அதிகரிக்கும்", என்று நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



பலகட்ட ஆய்வுகள்


பல நாட்களாக மூடப்பட்டுள்ள கடைகளையும் கண்டறிந்து நீக்கி உள்ளோம். அவை முன்பு அளவிடப்படாமல் இருந்தன. செயல்படாத கடைகளை குழு தொடர்ந்து மதிப்பீடு செய்யும். வெறும் ஆறு மாதங்களில், பிளிங்கிட் வணிகமானது, 15க்கும் குறைவான நகரங்களில் இருக்கும். உணவு டெலிவரிகளை விட மளிகை பொருட்கள், மருந்து பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் அதிக அளவில் லாபம் தருவதாகவும், அவை சராசரியாக எவ்வளவிற்கு ஆர்டர் செய்யப்படுகிறது என்று ஆய்வு செய்யப்படுகிறது. அவற்றின் படி இந்த ஆப் மேலும் மேம்படுத்தப்படும் என்று தீபிந்தர் கோயல் தெரிவித்தார்.