Pune: மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தனியாக இருந்த 19 வயது இளம் பெண்ணிடம் அத்து மீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சொமோட்டோ நிறுவன டெலிவரி மேன் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். 


கடந்த சனிக்கிழமை அதாவது செப்டம்பர் மாதம் 17ம் தேதி புனேவில் உள்ள 19 வயது பெண் ஒருவர் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் வர்த்தக நிறுவனமான சொமோட்டோவில் ஆர்டர் செய்துள்ளார். உணவு டெலிவரி செய்ய வந்த சொமோட்டோ ஊழியர், 19 வயது பெண் தனியாக உள்ளார் எனபதை அறிந்து கொண்டவர், குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.  தண்ணீர் எடுக்கச் சென்ற, அந்த 19 வயது பெண்ணை வளைத்து மடக்கிப் பிடித்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக பெண் காவல் துறையிடம் கூறியுள்ளார். தன்னிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அந்த சொமோட்டோ ஊழியரின் மீது காவல் துறையில் 19 வயது இளம் பெண் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினர், அந்த பெண்ணிடம் அத்துமீறயதாக கூறப்பட்ட 40 வயது மதிப்புள்ள சொமோட்டோ நிறுவன ஊழியர், ரேஸ் ஷைக் என்பது கண்டு பிடிக்கப்பட்டு, அவர் காவல் துறையால் கைதும் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சொமோட்டோ நிறுவனத்தின் சார்பிலோ, சொமோட்டோ நிறுவன ஊழியர் ரேஸ் ஷைக் சார்பிலோ எந்த விதமான விளக்கமோ, இதுவரை தரப்படவில்லை. மேலும், தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக  குற்றம்  சாட்டப்பட்ட சொமோட்டோ நிறுவன ஊழியர், ரேஸ் ஷைக் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 354 மற்றும்  354 ’அ’ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






தற்போதுள்ள அதிநவீன உலகத்தில் பலரும் தங்களுக்கு தேவையானவற்றை தங்களது வீட்டில் இருந்தே தங்களின் மொபைல் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள முடியும் எனும் வசதிகள் வந்து விட்டதால், பெரும்பாலானோர் இவ்வாறு ஆர்டர் செய்கின்றனர். இவ்வாறு ஆர்டர் செய்வதில் உணவு என்பது பிரதமான ஒன்றாக இருக்கிறது. மக்கள் பெரும்பாலும் தங்களது வீட்டில் இருந்தே தங்களுக்கு தேவையான உணவுகளை ZOMATO, SWIGGY உள்ளிட்ட டெலிவரி நிறுவனங்களில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்கின்றனர். மேலும், இவ்வாறு செயல் படும் ஆனலைன் டெலிவரி நிறுவனங்களால், நாட்டில் குறிப்பிட்ட அளவு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.