கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டத்தில் 5 வயது சிறுமிக்கு 10 நாட்களுக்கு மேலாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில், அவரது பரிசோதனை மாதிரிகளை சோதனை செய்ததில், ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ் முதல் முறையாக 1947ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. 2015ஆம் ஆண்டு இந்த நோய் பரவல் மிகவும் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் ஸிகா வைரஸ் பரவல் அதிகரித்தது.
கர்நாடகத்தில் தொற்று:
இதையடுத்து, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாவட்டங்களில் ஜிகா வைரஸ் தொற்றானது கண்டறியப்பட்டது. இந்நிலையில், தற்போது முதல் முறையாக கர்நாடகாவில் உள்ள ராய்ச்சூர் மாவட்டத்தில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஜிகா வைரஸ் தொடர்பான அறிகுறி உள்ளவர்கள், உடனடியாக ஜிகா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
ஸிகா வைரஸ் நோய் அறிகுறிகள் என்னென்ன?
டெங்கு, சிக்கன்குனியா போலவே ஜிகா வைரசானது, நோய் தொற்று ஏற்பட்ட நபர்களுக்கு காய்ச்சல், மூக்கடைப்பு, தலைவலி, அரிப்பு ஆகியவை தொடர்ந்து கொண்டு இருக்கும். அத்துடன் சேர்ந்து உடம்பு வலி அதிகமாக இருக்கும். குறிப்பாக தசை பகுதிகளில் அதிகளவில் வலி ஏற்படும்.
விரைவில் குணமாகும்:
ஸிகா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு உரிய மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகளை எடுத்துக் கொண்டால் விரைவில் குணமாகும். 1 சதவிகிதம் பேர் மட்டுமே தற்போது வரை ஸிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். ஆகவே ஸிகா வைரஸ் பாதிப்பால் உயிருக்கு பெரிய ஆபத்து இல்லை என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜிகா வைரஸ் பாதிப்புக்கு எதிராக தடுப்பூசி எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே டெங்கு, சிக்கன் குனியா போன்ற நோய்களுக்கு எடுக்கும் தடுப்பு நடவடிக்கையே, இதற்கும் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது முடிந்த வரை எங்கும் நீர் தேங்காமல் இருக்கும் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நோயை பரப்பும் கொசுக்கள் பகல் நேரத்திலேயே அதிகம் கடிப்பதால் அந்த சமயத்தில் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read: Crime: மனைவி, குழந்தைகளை வெட்டிக்கொன்று கூலித் தொழிலாளி தற்கொலை - செங்கம் அருகே அதிர்ச்சி
Also Read: Kerala: கேரளா: பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதா நிறைவேற்றம்..!