திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் ஒரவந்தவாடி ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் பகுதியை சேர்ந்து பழனி வயது (40) இவருடைய மனைவி வள்ளி வயது (37) இந்த தம்பதிகளுக்கு 5 பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இதில் மூத்த மகளுக்கு மட்டும் திருமணமான ஆகிவிட்டது. இந்நிலையில் 5 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இதில் குடி போதைக்கு அடிமையான பழனி தன்னுடைய மனைவி வள்ளியின் நடத்தின் மீதும் சந்தேகம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடைப்பெற்றுவது வழக்கம். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி தனது இருசக்கர வாகனத்தை அடமானம் வைத்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.


 




அதனைத்தொடர்ந்து வள்ளி தன்னுடைய உறவினர்களிடம் தனது கணவர் குடித்துவிட்டு தன்னை அடிப்பதாக கூறியுள்ளார்.அதன் பிறகு   பழனி மற்றும் வள்ளியின் உறவினர்கள் நேரில் வந்து இருவரையும் சமாதானம் செய்து கடந்த இரண்டு தினங்களாக பழனியின் வீட்டிலேயே உறவினர்களுடன் தங்கி உள்ளனர்.மேலும் நேற்று காலை இருவரின் உறவினர்கள்  அனைவரும் ஊருக்கு சென்றுள்ளனர். பின்னர் வீட்டில் இருந்து வெளியே சென்ற பழனி குடித்து விட்டு நள்ளிரவில் வீட்டிற்கு வந்து மீண்டும் மனைவி வள்ளியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பழனி வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து வள்ளியின் கழுத்தில் வெட்டியுள்ளார்.


இதனைத் தொடர்ந்து தூக்கத்தில் இருந்த மகள்கள் திரிஷா வயது 15, மோனிஷா வயது 14, பூமிகா வயது 9, சிவசக்தி வயது 6, மகன் தனுஷ் வயது 4 ஆகிய ஆறு நபர்களையும் கொடூரமாக கத்தியால் துடிக்க துடிக்க பழனி  அறுத்து கொலை செய்து விட்டு  பக்கத்து அறையான பூஜை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதிகாலையில் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் மாடு பால் கறப்பதற்காக வள்ளியின் வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.அப்போது கதவு உள்பக்கமாக தாலிட்டிருந்ததால் ஜன்னல் வழியாக பக்கத்து வீட்டு காரர் பார்த்துள்ளார்.


குடும்பமே ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார், உடனடியாக அவர் கூச்சலிட்டாரு கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.பின்னர்  கிராம மக்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது குடும்பமே ரத்த வெள்ளத்தில் வெட்டுபட்ட நிலையில் இருந்ததை கண்டு கிராமமக்கள் அழுதுள்ளானர். அப்போது  பூமிகா என்ற 9 வயது குழந்தை மட்டும் கை அசைத்துள்ளது. பின்னர் உடனடியாக அந்த குழந்தையை மீட்டு கிராம மக்கள் அருகாமையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவிக்கு சேர்த்தனர்.


 




அதன் பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். அந்த குழந்தையின் பின்பக்கம் மண்டையில் வெட்டப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவண்ணாமலை கிராமிய காவல்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து உள்ளிட்ட வருவாய் துறையினர். சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டபோது பழனி மனைவி உள்ளிட்ட நான்கு குழந்தைகளையும் வெட்டி கொலை செய்துவிட்டு அதே இடத்தில் அறிவாலை போட்டுவிட்டு அருகாமையில் உள்ள பூஜை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருந்துள்ளார்.


 




பின்னர் காவல்துறையினர் 6 சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் தனிப்படையுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் உள்ள கிராம பொதுமக்களிடம் கொலை நடந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். இச்சம்பவம் ஒரவந்தவாடி மற்றும் சுற்றுப்பகுதிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது உடன் ஒரவந்தவாடி கிராம பொதுமக்கள் கண்ணீர் மல்க சோகத்தில் மூழ்கியது.