இந்தியாவின் பிரபல கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் உள்நாடு, வெளிநாட்டில் Z+ பாதுகாப்பு வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


முகேஷ் அம்பானிக்கு Z+ பாதுகாப்பு


முகேஷ் அம்பானியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, 82.6 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இவர் உலகின் டாப் பணக்காரர்கள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தங்களது குடும்பத்தினருக்கு தொடர் அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும், நிதி ரிதீயாக சீர்குலைப்பு ஏற்படுத்தும் விதமாக தங்களுக்கு தொடர் ஆபத்துகள் இருப்பதாகவும், அம்பானி தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு Z+ பாதுகாப்பை வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த பாதுகாப்புக்கான முழு செலவையும் அம்பானி குடும்பத்தினரே ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டில் பயணம் செய்யும்போதும் Z+ பாதுகாப்பானது அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.



அச்சுறுத்தல் இருந்தால் கொடுக்க வேண்டும்


"ஒருவர் தனக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக உணர்ந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால் அதற்காகும் செலவையும் அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். பாதுகாப்பு குறைவாக இருப்பதாக உணருபவர்களிடம், எங்கு தங்க வேண்டும், எங்கு தங்க கூடாது என்று கட்டுப்படுத்தகூடாது. அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதே சிறந்தது", என்று உச்சநீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்: CM Stalin Birthday: இன்று பிறந்தநாள்.. 'தொண்டன் முதல் தலைவன் வரை..' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்து வந்த அரசியல் பாதை..!


55 பாதுகாவலர்கள்


மனுதாரரான அம்பானியின் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் செய்யும் வணிக நடவடிக்கைகள் வைத்து பார்க்கும்போது அவர்களுக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பது நியாயம்தான் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும், 55 பாதுகாவலர்கள், 10க்கும் மேற்பட்ட என்எஸ்ஜி கமாண்டோக்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.



திரிபுரா மாநில உயர் நீதிமன்றம்


இதையடுத்து கடந்த ஆண்டில் திரிபுரா மாநில உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. அம்பானி, அவரது மனைவி நிடா அம்பானி, மக்கள் ஆகாஷ், ஆனந்த, இஷா ஆகியோருக்கு விடுக்கப்படும் மிரட்டல்கள் குறித்த அறிக்கையை உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்யுமாறு திரிபுரா நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக ல், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் திரிபுரா உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், மும்பையில் உள்ள முகேஷ் அம்பானி குடும்பத்தாருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை தொடர்ந்து கொடுத்து வந்தது.