வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ரூ. 1,068.50 க்கா இருந்த எரிவாயு சிலிண்டர் ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ. 1,118.50 க்கு விற்பனையாகி வருகிறது.
ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.
இந்தநிலையி, மார்ச் 1ம் தேதியான இன்று எட்டு மாதங்களுக்கு பின், வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதத்திற்கு பிறகு, உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலை நிலையாக இருந்தது. ஆனால், வணிக சிலிண்டர்களின் விலை மட்டுமே அவ்வபோது மாற்றமடைந்து கொண்டு இருந்தது.
இதையடுத்து, சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.1917 லிருந்து இனி ரூ.2268க்கு விற்பனையாகிறது.
மார்ச் 1ம் தேதி முதல் வீட்டு சிலிண்டர் விலை:
மார்ச் 1ம் தேதி முதல் வீட்டு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் முக்கிய நகரங்களில் என்ன விலையில் விற்கிறது என்பதை கீழே பார்க்கலாம்.
- சென்னையில் ரூ. 1,068.50 க்கா இருந்த எரிவாயு சிலிண்டர் ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ. 1,118.50 க்கு விற்பனையாகி வருகிறது.
- டெல்லியில் ரூ. 1,053க்கு பதிலாக ரூ. 1,103 க்கு விற்பனையாகி வருகிறது.
- மும்பையில் இந்த சிலிண்டர் ரூ. 1052.50 க்கு பதிலாக ரூ.1,102க்கு விற்பனையாகிறது.
- கொல்கத்தாவில் ரூ.1,079 க்கு பதிலாக ரூ.1,129 ஆக விற்பனையாகிறது.