கொரோனா தடுப்பூசிக்கு பயந்து புதுச்சேரியில் ஒருவர் மரத்தில் ஏறிக்கொண்டு தில்லாலங்கடி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று தற்போது உலகம்  முழுக்க பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவைப்  பொறுத்தவரை டெல்லியில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கும், மகாராஷ்டிராவில் 160க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமிக்ரான் தொற்றானது உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 45 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.




இது ஒருபுறமிறக்க தீவிரமாக கொரொனா தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுவிட்ட நிலையில் மீதமுள்ளவர்களுக்கு அரசு தீவிரமாக தடுப்பூசி செலுத்தி வருகிறது. தொடக்கத்தில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இப்போது தடுப்பூசி முகாம்கள் மட்டுமின்றி, மக்களின் இடங்களுக்கே செவிலியர்கள் சென்று தடுப்பூசி செலுத்துகின்றனர். இந்நிலையில்  கொரோனா தடுப்பூசிக்கு பயந்து புதுச்சேரியில் ஒருவர் மரத்தில் ஏறிக்கொண்டு தில்லாலங்கடி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


புதுச்சேரி விளியனூர் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை ஊழியர்கள் சென்றுள்ளனர். தடுப்பூசிக்கு பயந்த ஒருவர் மரத்தில் ஏறி வாக்குவாதம் செய்தார். செவிலியர்கள் மன்றாடியும் அவர் கீழே இறங்கி வரவில்லை. இன்னமும் பொதுமக்களிடையே தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு இல்லை என்பதை இந்த வீடியோ தெளிவாக காட்டுவதாக பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


கொரோனா, ஒமிக்ரான் ஆகிய பாதிப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமென்றால் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டுமென அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: TN Gold Loan Waiver: நகைக்கடன் தள்ளுபடி புதிய அப்டேட்: 35 லட்சம் பேருக்கு தள்ளுபடி கிடையாதாம்! முழு விபரம் இதோ!


‛இவ்வுலகை காப்பவளுக்கு இன்சூரன்ஸா?’ எக்ஸ்ப்ரி ஆன காரில் லக்ஸரி பயணம் செய்து வரும் அன்னபூரணி அம்மா!