உத்தர பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இதுவரை 13 லட்சத்தைக் கடந்துள்ளது. ஆக்சிஜன் மற்றும் மருத்துவமனை படுக்கைகள் பற்றாக்குறையும் தொடர்ந்து நிலவிவருகிறது. இதற்கிடையே உத்திரப்பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அங்கே அரசால் மாவட்ட வாரியாக நிறுவப்பட்டிருக்கும் பசுப்பராமரிப்பு கூடங்களில் ஆக்சிமீட்டர் மற்றும் வெப்பத்தைக் கண்காணிக்கும் கருவியையும் பொருத்த உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் இதுவரை 5268 பசுப்பராமரிப்புக் கூடங்கள் அரசால் நிறுவப்பட்டிருக்கின்றன. இதில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேரிடர் காலத்தில் இந்தப் பசுக்களுக்கான உதவி மையங்களை (Help Desk) நிறுவச் சொல்லி அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.




கொரோனா காலத்தில் பசுக்கள் மற்றும் இதர கால்நடைகளுக்கான உணவுத் தட்டுப்பாட்டைப் போக்க உத்திரப்பிரதேச அரசு தீவண வங்கித் திட்டத்தைக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.


இதனுடன் பசுப்பராமரிப்பு மையங்கள் சமரசமின்றி கொரோனா கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் ஒவ்வொரு பசுப்பராமரிப்பு மையங்களிலும் பசுவின் உடல்நலனைக் கண்காணிக்க பல்ஸ் ஆக்ஸிமீட்டர் எனும் ஆக்சிஜன் அளவீட்டுக் கருவி மற்றும் வெப்பநிலையைக் கண்காணிக்கும் கருவி (Thermo Scanner) ஆகியவைப் பொருத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொரோனா காலத்தில் பசுக்கள் மற்றும் இதர கால்நடைகளுக்கான உணவுத் தட்டுப்பாட்டைப் போக்க உத்திரப்பிரதேச அரசு தீவன வங்கித் திட்டத்தைக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மொத்தமுள்ள இந்த 3,452 வங்கிகளின் மூலம் கொரோனா பேரிடர் காலத்தில் உணவின்றி சாலைகளில் தவிக்கும் கால்நடைகளுக்கு தீவணம் வழங்கப்படும். மேலும் பசுக்களை பராமரிக்கும் விவசாயிகளுக்கு மாதாந்திரமாக 900 ரூபாயும் வழங்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்திருந்தது.

விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுமா?

முதல் கொரோனா காலக்கட்டம் தொடங்கிய கால்நடை, வீட்டுவிலங்குகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுவருவதாகத் தொடர்ந்து தகவல்கள் வந்துகொண்டிருந்தன. அவை தவறான தகவல் விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்படாது எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போதைய இரண்டாம் அலைக் காலக்கட்டத்தில் ஐதராபாத் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.  ஐதராபாத் நேரு உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தெரிவித்தது. 

இதுகுறித்து  சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், " ஐதராபாத், நேரு உயிரியல் பூங்காவில் உள்ள 8 சிங்கங்களுக்கு சுவாசப் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அந்த சிங்கங்களுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு  கடந்த ஏப்ரல் 24ம் தேதி அன்று சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி படுத்தப்பட்டதாக இந்த பரிசோதனையை மேற்கொண்ட சிசிஎம்பி-லாகோன்ஸ் மையம்  தெரிவித்துள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தது.  


 


Also Read: சிங்கங்களுக்கு கொரோனா; ஐதராபாத் உயிரியல் பூங்காவில் தனிமை