பொது இடங்களில் சிலை வைப்பதற்கு கடந்த 8 ஆண்டுகளாக விதித்துள்ள தடையினை  நீக்கக்கோரிய உத்தரப்பிரதேச அரசு, உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. பொது இடங்களில் சுதந்திரப்போராட்ட வீரர்கள், அரசியல் பிரமுகர்கள், மதத்தலைவர்களின் சிலைகள் நிறுவப்பெறுவது வழக்கமான ஒன்று. வரும் தலைமுறையினரும் இவர்கள் யார்? என தெரிந்து கொள்வதற்கான நோக்கத்தோடு சிலைகள் பல நிறுவப்படுகின்றனர். சிலைகள் அமைதியாக இருந்தாலும், மத கலவரங்களோ, சாதிப்பிரச்சனைகளோ எழும் சூழலும் அவ்வப்போது ஏற்படுகிறது. சிலை அவமதிப்பு என்று தொடர்ந்து சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதுபோன்று கடந்த 2006 ஆம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட பிரச்சனையின்போது சிலைகள் அவமதிக்கப்பட்டதோடு, வாகனங்கள் எல்லாம் அடித்து உதைக்கப்பட்டன. இந்த வழக்கில் குஜராத் மாவட்ட நீதிமன்றம் வதோரா சாலை மற்றும் பொது இடங்களில் சிலைகளை நிறுவக்கூடாது என உத்தரவிட்டது.



இதனையடுத்து கடந்த 2013 ஆம் ஆண்டு கேரளாவில் தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட இடத்தில் ஒரு தலைவரின் சிலையை வைக்க மாநில அரசு அனுமதி அளித்திருந்த நிலையில் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கில் சாலைகள் மற்றும் பொது இடங்களில் தலைவர்களின் சிலைகளை வைப்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதோடு மட்டுமின்றி பொது இடங்களில் போக்குவரத்திற்கு இடைதிற்கு இடையூறாக சாலைகளின் நடுவே சிலைகளை வைக்க மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இனி அனுமதி வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  மேலும், ஏற்கனவே உள்ள சிலைகளை புனரமைக்கவும், அழகுப்படுத்தும் பணிகளில் ஈடுபடலாம் எனவும் அதற்கு எந்தவித தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் தான் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாத், சமயத் தலைவர்கள், மதத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் , சுதந்திரப்போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளின் சிலைகளை பொது இடங்களில் நிறுவதற்கு ஆர்வம் காட்டிவருகிறார். ஆனால் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின் படி,  கடந்த 8 ஆண்டுகளாக எந்தவொரு சிலையும் பொது இடங்களில் வைப்பதற்கான தடை உள்ளது. எனவே யோகி ஆதித்யநாத் இந்த உச்சநீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவினை நீக்கக்கோரி உச்சநீதிமன்றத்தினை நாடியிருந்தார். உத்தரப்பிரதேச அரசின் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.  ஆனால் மாநில ஆலோகரின் வேண்டுகோளின் பேரில் வழக்கின் விசாரணை மீண்டும் இரண்டு வார காலங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



மேலும் உத்தரப்பிரதேச அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ”மாநிலத்தில் பயன்படுத்தப்படாத நிலத்தினை அபிவிருத்தி செய்யும் முயற்சியின்போது, அங்கு மத அல்லது அரசியல் பிரமுகர்களின் சிலையினை வைப்பதற்கு விரும்பலாம். மேலும் பொது இடங்களில் சிலைகளை வைப்பதால் எந்த வித ,இடையூறுகளும் ஏற்படாது எனவும், சுற்றுலா மற்றும் அழகியல் நோக்கங்களை மட்டுமே இது பிரபலிக்கும் விதமாக அமையும் என தெரிவித்துள்ளனர். மேலும் சிலைகள் நிறுவப்படுவதால் வருங்காலச் சந்ததியினரும் அறிந்துகொள்ளும் வகையிலும் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றைப் பாதுகாக்க உதவியாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். எனவே பொது இடங்களில் சிலைகள் வைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.தற்பொழுது இரண்டு வார காலங்களுக்கு இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், சிலைகள் வைப்பதற்கு அனுமதி கிடைக்குமா? அல்லது மறுக்கப்படுமா? என்பதனைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.