ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அந்தக் கட்சியின் எம்எல்ஏ ஒருவர் 2 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பதி அருகே கோயில் கட்டியுள்ளார்.
காளஹஸ்தியை சேர்ந்த எம்எல்ஏ மதுசூதனன் ரெட்டி சித்தூர் மாவட்டம் திருப்பதி அருகே ஒரு கோயிலுடன் கூடிய அருங்காட்சியகத்தை கட்டியுள்ளார். ஆந்திராவில் செயல்படுத்தப்படும் ஒன்பது நலத்திட்டங்களை பிரதிபலிக்கும் விதமாக கட்டப்பட்ட கோயில், நவரத்தினங்கள் கொண்ட கண்ணாடி மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கோயிலில் கண்ணாடி மண்டபம் கட்டப்பட்டு, வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர் சிலை நிறுவப்பட்டது.
கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் ஒரு சில நிபுணர்களை கொண்டு கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்காக எம்எல்ஏ தனது நிதியை பயன்படுத்தியும், தலைவர்களிடமிருந்தும், கட்சியினரிடமிருந்தும் பணத்தை சேகரித்துள்ளார்.
தொடக்கத்தில், இந்தக் கோயிலை கட்டுவதற்கு சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் சுமார் 2 கோடியாக செலவு அதிகரித்தது. மேலும், இந்த கோயிலின் பின்னால் கட்டப்பட்ட ஜகன்னா ஹவுசிங் காலனியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
நவரத்தினங்கள் திட்டங்கள் மூலம் நிதி உதவி மற்றும் வாழ்வாதாரத்திற்கான ஆதரவை வழங்குவதன் மூலம் ஏழைகளை உயர்த்த அரசு தீர்மானித்துள்ளது. எனவே இந்தக் கோயிலுக்கு “நவரதன்லு ஆலயம்” என்று பெயரிடப்பட்டதாக எம்எல்ஏ கூறினார்.
இந்தக் கோயிலில் ஒன்பது தூண்கள் உள்ளன. அவை முதலமைச்சரால் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை சித்தரிக்கின்றன. எம்எல்ஏ தனது நிதியில் சுமார் 75 சதவிகிதத்தை செலவழித்து, மீதித்தொகையை கட்சியினரிடமிருந்து பெற்று கோயிலை கட்டினார். இந்தக் கோயிலுக்கு வருவோருக்கு ஜெகன்மோகன் ரெட்டி செய்த நலத்திட்டங்கள் குறித்த கையடக்க பிரதிகள் அளிக்கப்படுகின்றன. ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் நவரத்னலு திட்டம் குறித்த படங்கள் வைக்கபட்டு உள்ளன. முதல்வரின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலில் உள்ள உண்டியில் பணம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை வழங்குவதற்கு பதிலாக, மக்கள் தங்கள் வேண்டுகோள்களையும் குறைகளையும் மனுக்களாக கொடுக்கலாம்.
துணை முதல்வர் கே.நாராயண சுவாமி, பெதிரெட்டி ராமச்சந்திர ரெட்டி மற்றும் மிதுன் ரெட்டி ஆகியோர் நேற்று இந்தக் கோயிலைத் திறந்து வைத்தனர். இது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முதல்வருமான ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டிக்கு விரைவில் அர்ப்பணிக்கப்பட உள்ளது.
LPG Price hike : சமையல் எரிவாயு விலை கிடுகிடு உயர்வு...ரூ.25 அதிகரிப்பு!