குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும்  எதிகட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா டெல்லியில் பேட்டியளித்தார். 


அப்போது, “மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவிக்கு என்னை போட்டியிட பணித்ததற்கு நன்றி. முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பொறுப்பை கையாள்வதில் மெத்தனம் கூடாது” எனத் தெரிவித்தார். 


எதிர்கட்சிகளின் வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்னரே ஆளுங்கட்சி தனது வேட்பாளரை அறிவித்துவிட்டது எனவும் அவர் கூறினார். ஜனநாயகத்தினை வலுப்படுத்துவதே எதிர்கட்சிகளின் நோக்கம் எனவும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். 


தற்போது குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக் காலம் ஜூலை 24, 2022ல் முடிவடையவுள்ள நிலையில், நாட்டின் 16வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18ல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பினை ஜூன் 9ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. நாட்டின் மிக முக்கியமான பதிவிக்கான தேர்தல் என்பதால் இந்த தேர்தல் பெறும் கவனத்தினைப் பெற்றுள்ளது. ஜூலை 18 நடக்கும் தேர்தலின் முடிவுகள் ஜூலை  21ல் வெளியிடப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. 


இந்நிலையில் ஆளும் கட்சியான பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் குடியரசுத் தலைவருக்கான வேட்பாளராக திரௌபதி முர்ரே அவர்களை நிறுத்தியுள்ளது. திரௌபதி முர்ரே பழங்குடி வகுப்பினைச் சேர்ந்தவர் என்பதால், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, “ முதல் முறையாக ஒரு பழங்குடி வகுப்பைச் சார்ந்தவர் குடியரசு வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்” என, அவர் கூறினார். 






அதன் பின்னர் எதிர்கட்சிகள் தனது சார்பில் போட்டியிடும் குடியரசுத் தலைவருக்கான வேட்பாளராக, யஷ்வந்த் சின்ஹா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது,


“மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவிக்கு என்னை போட்டியிட பணித்ததற்கு நன்றி. முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பொறுப்பை கையாள்வதில் மெத்தனம் கூடாது” எனத் தெரிவித்தார். 


எதிர்கட்சிகளின் வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்னரே ஆளுங்கட்சி தனது வேட்பாளரை அறிவித்துவிட்டது எனவும் அவர் கூறினார். ஜனநாயகத்தினை வலுப்படுத்துவதே எதிர்கட்சிகளின் நோக்கம் எனவும் கூறினார். புதிய கட்டிடம் கட்டுவதால் மட்டுமே நாடாளுமன்றாத்தின் கண்ணியம் மற்றும் மகத்துவத்தை உயர்த்த முடியாது. மாறாக விதிகள் மதிக்கப்படும்போது நாடுளுமன்றத்தின் கண்ணியம் அதிகரிக்கிறது. அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றுவதே ஆளும் கட்சியின் நோக்கம், அனைத்து விவகாரங்களிலும் நடுநிலையாக செயல்படுவதே எதிர்கட்சிகளின் நோக்கம் என  செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்  கூறினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண