இந்தியாவில் மிகவும் பரிச்சயமான மற்றும் உலகளவில் அதிகம் விற்பனையாகும் பார்லி ஜி பிஸ்கெட்டின் சுவை மற்றும் விலை இத்தனை ஆண்டுகளாய் ஒரே நிலையில் உள்ளது.


90 கிட்ஸ்கள் பெரும்பாலும் விரும்பிச்சாப்பிடக்கூடிய பிஸ்கெட்டாகவும், குழந்தைகள் சக்திமான்  ஸ்டிக்கர் கிடைக்கும் என்பதற்காக அதிகளவில் வாங்கும் பிஸ்கெட்டாக இருந்துவந்தது பார்லே ஜி பிஸ்கெட் தான். மேலும் டீ அருந்தும்போது சைட் டிஷ்ஷாக இந்த பிஸ்கெட்தான் அனைவரின் நினைவுக்கு வரும். அப்போது மட்டுமில்லை பல ஆண்டுகளாக இப்போதும் தன்னுடைய தரத்தில் நிலையாக உள்ளது. இதோடு மற்ற பிஸ்கெட்களை விட உலகளவில் அதிகளவில் விற்பனையாகும் பிஸ்கெட் என்றாலே அது பார்லே-ஜி தான். இப்படி பல்வேறு சிறப்புகளைக்கொண்டுள்ள பார்லே ஜி பிஸ்கெட் பற்றி பல சுவாரஸ்ய மற்றும் அறியப்படாத உண்மைகள் குறித்து இங்கே நாமும் தெரிந்துகொள்வோம்.



பார்லே ஜி உருவான வரலாறு:


மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள பார்லே ஜி பிஸ்கெட் கடந்த 1929 ஆம் ஆண்டு முதல் பார்லே தொழிற்சாலையைத் தொடங்கியது. பிரிட்டன்களுக்கு வழங்கிய ஒரே உள்நாட்டு மிட்டாய் நிறுவனமான பிரிட்டானியாவுக்கு எதிராக, பார்லே நிறுவனம் இந்தியர்களுக்கு சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. முன்னதாக ஆரஞ்சு மிட்டாய்கள் மற்றும் தின்பண்டங்கள் போன்ற தங்கள் தயாரிப்பு வரம்பை விரிவுபடுத்தும் வகையில் முதல் பார்லே குளுக்கோ கடந்த 1938 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.


இதனையடுத்து இந்தியாவில் பல்வேறு பிஸ்கெட் ப்ராண்டுகள் குளுக்கோஸ் பிஸ்கெட்டுகளை அறிமுகப்படுத்தியதால்,  கடந்த 1985-ஆம் ஆண்டு பார்லே குளுக்கோ,பார்லி ஜி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கான டிவி விளம்பரம் கடந்த 1982-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்றாலும், கடந்த 1990களில் 90 ஸ் கிட்ஸ்களின் சூப்பர் ஹூரோ சக்திமான் பிஸ்கெட் விளம்பரத்திற்கு ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து பெரியவர்கள் மட்டுமில்லை சிறுவர்கள் மனதில் முக்கிய இடத்தைப் பிடித்த பெருமை உள்ளது.


Wrapper-இல் இருக்கும் சிறுமியின் புகைப்படம்:


பார்லி ஜி பிஸ்கெட்டை பலரும் விரும்பி வாங்குவதற்கு முதல் காரணம் பிஸ்கெட் பாக்கெட்டில் உள்ள குழந்தைதான். பார்ப்பதற்கே ரொம்ப க்யூட் ஆக இருக்கும் இச்சிறுமியின் பெயர் நீரு தேஷ்பாண்டே என்றும், இந்தப்புகைப்படத்தை எடுக்கும்போது அச்சிறுமிக்கு வயது 4  எனக் கூறப்பட்டது. ஆனால் இது வதந்தி எனவும், உண்மையில் கடந்த 1960-இல் எவரெஸ்ட் கிரியேட்டிங் கலைஞரான மகன்லால் தயாவால் செய்யப்பட்டதாக வழக்கு ஒன்று சென்றுக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.


விற்பனையை அதிகரிக்கும் பார்லே ஜி:


கடந்த 2011-ஆம் ஆண்டில் நீல்சன் நடத்திய ஆய்வில், இந்தியாவில் உள்ள 6  மில்லியனுக்கு அதிகமான சில்லறை விற்பனைக்கடைகள் பார்லேஜியை விநியோகிக்கின்றன எனவும் உலகளவில் எங்கெல்லாம் பயன்படுத்துகின்றனர் என கண்டறியப்பட்டது. அதில்  உலகின் சில பகுதிகளில் ஒவ்வொரு நொடியும் பார்லே ஜி பிஸ்கெட்டை 4551 பேர் சாப்பிடுகின்றனர் எனவும் சீனாவில் விற்கப்படும் அனைத்து பிஸ்கட் பிராண்டுகளையும் விட பார்லி – ஜி அதிகமாக விற்பனையாகியுள்ளது. மேலும் கடந்த 2013 ல் பார்லி – ஜி சில்லறை விற்பனையில் ரூ.5 ஆயிரம் கோடியைத் தாண்டிய இந்தியாவின் FMCG பிராண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. தற்போது உலகளவில் விற்பனையாகும் பிஸ்கெட்டுகளில் பார்லி – ஜி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வெகுஜன மக்களின் பிஸ்கெட்:


பார்லே – ஜி பிஸ்கெட் பல ஆண்டுகளாக மலிவு விலையில் கிடைப்பதால் இன்று வரை வெகுஜன மக்களின் பிஸ்கெட்டாக இது உள்ளது. பால், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட மூலப்பொருள்களின் விலை உயர்ந்தாலும் இதுவரை இந்த பிஸ்கெட் விலை உயரவில்லை. அதுவும் கொரோனா காலகட்டத்திலும் மலிவு விலையில் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு 79 ஆண்டுகள் ஆனபோதிலும் பார்லே ஜி பிஸ்கெட்டின் சுவை மற்றும் தரத்தில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்தது.


இதுபோன்று பார்லே ஜி பல்வேறு சிறப்புகளைக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் இந்தியாவில் 130 உற்பத்தி ஆலைகளில் பார்லே ஜி கம்பெனியின் பிஸ்கெட்டுகளைத் தயாரித்துவருகின்றனர். இதில் 10 ஆலைகள் மட்டுமே பார்லே ஜி கம்பெனிக்கு சொந்தமான தயாரிப்பு கம்பெனிகள் எனவும் மற்ற 120 ஆலைகள் ஒப்பந்த அடிப்படையில் பார்லே ஜி பிஸ்கெட்டுகளை தயாரித்துவருகிறது.


இதோடு பார்லேவின் முதல் மற்றும் பழமையானத் தொழிற்சாலை கடந்த 87 ஆண்டு செயல்பாட்டிற்குப்பிறகு கடந்த 2016 ல் இதன் உற்பத்தியை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது பார்லே இந்தியாவின் ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் தொழிற்சாலைகளைக்கொண்டுள்ளது. இந்நிறுவனங்களில் சாதாரண நாட்களிலேயே சுமாராக 400 மில்லியன் பார்லே ஜி பிஸ்கெட்டுகளை நாளொன்றுக்கு தயாரிப்பாளர்கள் என்றும் கூறப்படுகிறது.



அனைத்து மக்களைக் கருத்தில் கொண்டதோடு, இத்தனை ஆண்டுகளாய் சுவையிலும், தரத்திலும், விலையிலும் ஒரே நிலையில் உள்ளதால் தான் பார்லே -ஜி உலகளவில் அதிகம் விற்பனையாகும் ப்ராண்டுகளில் ஒன்றாக உள்ளது.