மேகாலயாவில் ஆற்றில் மிதக்கும் படகின் நம்பமுடியாத படத்தை இந்திய நீர்வளத்துறை அமைச்சகம்  தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது, தற்போது அந்த புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. மேகாலயாவில் உள்ள அந்த ஆற்றின் நீர் மிகவும் சுத்தமாகவும், வெளிப்படையாக இருக்கிறது.


அந்த ஆற்றின் கீழே பார்வையை செலுத்தினால் நீரை கடந்து பசுமை மற்றும் கற்பாறைகள் தெளிவாகத் தெரியும்.மேலும், அந்த ஆற்றில் பயணிக்கும் போது படகு தண்ணீரில் மிதக்காமல் நடுவானில் பறப்பது போன்று காட்சியளிக்கிறது.  இந்திய நீர்வளத்துறை அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இந்த ட்விட்டர் பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தில், படகில் பயணம் செய்பவர் உட்பட ஐந்து பேர் பயணிப்பதை படம் காட்டுகிறது. இது மேகாலயாவில் உள்ள உம்ங்கோட் நதியாகும். இந்த நதியை சுத்தமாக பாதுகாத்து வரும் அம்மாநில மக்களுக்கு அமைச்சகம் நன்றி தெரிவிக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


 






இந்த நதியானது மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் இருந்து சுமார் 100 கிமீ தொலைவில் அமைந்துள்ளது என்றும், இந்த நதி உலகின் தூய்மையான நதிகளில் இதுவும் ஒன்று" என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, இந்தியாவில் உள்ள நமது நதிகள் அனைத்தும் இதுபோல் சுத்தமாக இருக்க வேண்டும். உம்ங்கோட் நதியை (River Umngot)சுத்தமாக வைத்துள்ள மேகாலயா மக்களுக்கு ஹாட்ஸ் ஆஃப் என்று தெரிவித்தது.


கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய நீர்வளத்துறை பகிர்ந்த புகைப்படம், இதுவரை 19,000 க்கும் மேற்பட்ட விருப்பங்களும், 3,000 க்கும் மேற்பட்ட நபர்களால் ரீ- ட்வீட்களும் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தைப் பார்த்து சிலர் திகைத்தாலும், இப்போது உம்ங்கோட் நதியைப் பற்றி ஏராளமான மக்கள் அறிந்து உம்ங்கோட் நதியை காண பலரும் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியாவில் நதிகள் மாசுபடுவதற்கு ஒரு முக்கிய காரணம் நகரங்களிருந்து வெளியேற்றப்படும் நீர், தொழிற்சாலை கழிவுகளை அவற்றில் கலப்பது தான். டெல்லி நீர்வளத்துறை சமீபத்தில் சத் பூஜையின் போது யமுனா கரையில் இருந்து அழுக்கு நுரை தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தாமல் இருக்க தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண