இணையத்தில் நம்மை மகிழ்விக்கும், கலகலப்பூட்டும் வீடியோக்கள் ஒருபுறம் ஹிட் அடித்து வந்தாலும், மற்றொருபுறம் பயமூட்டும் வீடியோக்கள் நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி ஹிட் அடித்து வருகின்றன. 


குறிப்பாக விபத்து வீடியோக்கள், நூலிழையில் ஆபத்திலிருந்து தப்பிக்கும் வீடியோக்கள் உள்ளிட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.


அந்த வகையில் முன்னதாக தன் குழந்தையை கொடிய விஷம் கொண்ட பாம்பிடம் இருந்து தாய் ஒருவர் காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த வீட்டுக்குள்ளே இருந்து தன் தாயுடன் வெளியே வரும் சிறுவன் வாசற்படியில் இருக்கும் பாம்பை பார்க்காமலே குதித்தோடுகிறார்.


இந்நிலையில், பாம்பு மெல்ல நகர்ந்து சிறுவனை கொத்த முற்படுகையில், தாய் நல்வாய்ப்பாக கவனித்து குழந்தையை நொடிப்பொழுதில் காப்பாற்றுகிறார்.






இந்த வீடியோ இணையவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியும் ட்ரெண்ட் ஆகியும் வருகிறது. குழந்தையை சுதாரித்து நொடிப்பொழுதில் காப்பாற்றிய தாயின் செயலையும் தாயும் பாதுகாப்பு உணர்வு, அன்பு குறித்தும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.


முன்னதாக இதேபோல், உணவு உண்டு திணறிய குட்டிக் குரங்குக்கு ஹெய்ம்லிச் (Heimlich Maneuver) எனும் பிரபல முதலுதவி முறையை வழங்கிய புத்திசாலி தாய் குரங்கின் அன்பும் பாதுகாப்பு உணர்வும் நெட்டிசன்கள் மத்தியில் ஹிட் அடித்தது.



இந்த வீடியோவில், அம்மா குரங்கு அதன் குழந்தையின் மீது வயிற்றில் அழுத்துவதைக் காணலாம், இதனால் குட்டிக் குரங்கின் மூச்சுக்குழாயில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்படுத்தும் பொருள் எளிதாக வெளியே வரும். குட்டி குரங்கின் சுவாசக் குழாயில் சிக்கிய உணவு தாய் குரங்கு தந்த அழுத்தம் காரணமாக வெளியே வருவது இந்த வீடியோவில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை ஃபிகன் என்ற பயனர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இது 2.9 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 63 ஆயிரம் விருப்பங்களையும் பெற்றுள்ளது.


ஒரு நபரின் சுவாசக் குழாயில் உள்ள தடையை அகற்றுவதற்கான முதலுதவி முறையான இந்த ஹெய்ம்லிச் முதலுதவி முறையில் வயிறு, தொப்புள் மற்றும் விலா எலும்பு பகுதிகளில் திடீரென வலுவான அழுத்தம் கொடுக்கப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண