கர்நாடகா மாநிலம், துமகுரு மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ரேணுகா பிரசாத். 10-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்த போதிலும் பியுசி படிக்காமல் படிப்பை பாதியில் கைவிட்டார்.


திரைப்படங்களுக்கு அடிமை


தொடர்ந்து திரைப்படங்களுக்கு அடிமையாக மாறிய இவர் திகில் படங்கள் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.


அந்த வகையில் கடந்த சில நாள்களாக நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளிவந்து தெலுங்கு தாண்டி மிகப்பெரும் ஹிட் அடித்த அருந்ததி படத்தை இவர் பார்த்து ரசித்து வந்துள்ளார்.


அருந்ததிபோல் மறுபிறவி எடுக்க முயற்சி


இந்நிலையில் ரேணுகா பிரசாத்தின் பெற்றோர் எவ்வளவு முயன்றும் திரைப்பட மோகத்தில் இருந்து பிரசாத்தை மீட்டெடுக்க முடியாமல் போயுள்ளது. மேலும், முன்னதாக அருந்ததி படத்தில் மறுபிறவி எடுக்க அனுஷ்கா தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் காட்சியை தான் நிஜத்தில் செய்யவிருப்பதாக பிரசாத் தொடர்ந்து கூறி வந்ததாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில் முன்னதாக 20 லிட்டர் பெட்ரோல் வாங்கி வந்து, அதில் ஒரு லிட்டர் பெட்ரோலை தன் மீது ஊற்றிக்கொண்டு தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார்.


தொடர்ந்து ரேணுகா பிரசாத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் 60 விழுக்காடு தீக்காயங்களுடன் அவர் சிகிச்சைப் பெற்று வந்தார்.


தந்தைக்கு முக்தி


அருந்ததி படத்தை நாள்தோறும் 15 - 20 தடவைகளுக்கும் மேல் பார்த்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், முன்னதாக தன் தந்தைக்கு ரேணுகா பிரசாத் முக்தி அளிப்பதாக நினைத்து, அதற்கான செயல்பாடுகளைச் செய்த காட்சி வெளியாகி  சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில், நேற்று சிகிச்சைப் பலனின்றி ரேணுகா பிரசாத் உயிரிழந்தார்.


இந்நிலையில், ”ரேணுகா பிரசாத் படத்தில் காட்டப்படும் சில திகில் காட்சிகளைக் கண்டு பிடிவாதமாக இருந்தார். அவர் நன்றாகப் படித்து நல்ல தொழிலில் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, திரைப்படங்களுக்கான அடிமைத்தனம் அவரது உயிரைப் பறித்தது,” என விரிவுரையாளரும் பிரசாத்தின் நெருங்கிய உறவினருமான ராஜு வருத்தம் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், நன்றாக படித்து பெயர் சம்பாரிப்பார் மூட நம்பிக்கையால் ரேணுகா பிரசாத்தின் உயிர் பறிபோயுள்ளது அக்கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவிமையம் : 104


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050




மேலும் படிக்க : Salman Rushdie: பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து...! நடந்தது என்ன?


மேலும் படிக்க : புவிசார் அரசியல் பதற்றத்தை தூண்டியுள்ள சீன ஆராய்ச்சி கப்பல்: பேசுபொருள் ஆனது ஏன்?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண