சுதந்திர தினம் :
200 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர இடைவிடாமல் போராடிய ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நன்றியும் அஞ்சலியும் செலுத்துவதற்காவும் , இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றையும், தேசத்துக்காக மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தையும் நினைவு கூறும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுந்தந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா சுதந்திர தினத்தை கொண்டாடும் இதே நாளில் சில நாடுகள் அந்நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றனர்.
லிச்சென்ஸ்டீன்
ஆஸ்திரியாவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையில் உள்ள ஆறாவது சிறிய நாடுதான் லிச்சென்ஸ்டீன். இதனை ஜெர்மன் நாடு கைப்பற்றியிருந்தது. பின்னர் 1866 ஆம் ஆண்டு ஜெர்மனிட இருந்து லிச்சென்ஸ்டீனிற்கு விடுதலை கிடைத்தது. Assumption Feast மற்றும் அப்போதைய இளவரசர் ஃபிரான்ஸ் ஜோசப் பிறந்ததையும் இணைத்து அந்நாட்டு சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 கொண்டாடப்படுகிறது.
வட கொரியா மற்றும் தென் கொரியா
இந்த தினத்தை கொரியா நாடுகள் ‘National Liberation Day of Korea' என அழைக்கின்றனர். அதாவது கொரியாவின் தேசிய விடுதலை தினம். முரண்பட்ட இரு நாடுகளும் ஒன்றாக கடைப்பிடிக்கும் ஒரே தினம் இதுதான்.கொரிய தீபகற்பத்தில் ஜப்பானின் ஆக்கிரமிப்பை அமெரிக்கா மற்றும் சோவியத் படைகள் முடிவுக்கு கொண்டு வந்தன. அதன் விளைவாக ஆகஸ்ட் 15 , 1945 ஆம் ஆண்டு கொரியா சுதந்திர நாடானது. அதன் பிறகு ஏற்பட்ட உள்ளூர் போரில் இந்தியா- பாகிஸ்தான் போல வட கொரியா - தென் கொரியா என பிளவுப்பட்டது.
காங்கோ
80 ஆண்டுகால ஃபிரஞ்ச் காலனித்துவ ஆட்சியை 1960 ஆம் ஆண்டு , ஆகஸ்ட் 15 ஆம் தேதி முடிவுக்கு கொண்டு வந்தது காங்கோ. அந்த நாளை நினைவு கூறும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி காங்கோ சுதந்திர தினமாக அந்நாட்டு மக்கள் கொண்டாடுகின்றனர்
பஹ்ரைன்
காங்கோவை போலவே பஹ்ரைனும்பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில்தான் சிக்கிக்கிடந்தது. ஆகஸ்ட் 15, 1971 ஆம் ஆண்டு பஹ்ரைனிடம் இருந்த பிரிட்டிஷ் படைகளை ஆங்கிலேயர்கள் திரும்ப பெறுவதாக அறிவித்தனர். இந்த நாள்தான் இவர்களுக்கு உண்மையான சுதந்திர தினம் என்றாலும் கூட றைந்த ஆட்சியாளர் ஈசா பின் சல்மான் அல் கலீபா முதன் முதலாக ஆட்சிக்கட்டிலில் ஏறிய தினமான டிசம்பர் 16 ஆம் தேதியைத்தான் பஹ்ரைன் மக்கள் சுதந்திர தினமாக கொண்டாடுகின்றனர்.