உத்தரபிரதேச மாநிலத்தில் மாப்பிள்ளை கருப்பாக இருப்பதாக கூறி பெண் ஒருவர் திருமணம் செய்துக்கொள்ள மறுத்த செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் வேண்டாம் :
உத்திர பிரதேச மாநிலம் பர்தானா நகரில் கடந்த புதன் கிழமை (ஜுன் 9) ஆம் தேதி பெண் ஒருவருக்கு திருமணம் செய்வதாக பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டது. திருமணம் விழாக்களுள் ஒன்றான ஜெய்மாலா என்னும் மாலை மாற்றிக்கொள்ளும் சடங்கு ஒன்றில் முதன் முதலாக பெண் , மணமகனை சந்தித்தாக கூறப்படுகிறது. மணமகனை பார்த்தவுடன் , தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் இவர் இல்லை, மாப்பிள்ளை கருப்பாக இருக்கிறார், நான் திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன் என கூறி மணமகள் திருமணத்தை நிராகரித்திருக்கிறார்.
ஆள்மாறாட்டமா ?
இது குறித்து பெண் வீட்டாரிடம் கேட்ட பொழுது, பெண்ணின் தாயார் தங்களுக்கு புகைப்படத்தில் காண்பிக்கப்பட்ட மாப்பிள்ளை வேறு , தற்போது மணமகனாக இருக்கும் மாப்பிள்ளை வேறு . மாப்பிள்ளை வீட்டார் வேறு ஒருவரின் புகைப்படத்தை காட்டி தங்களை ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
மாப்பிள்ளை வீட்டார் புகார் :
இரு தரப்பும் நீண்ட நேரமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 6 மணி நேரம் நடைப்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் மணமகன் வீட்டார் பர்தன கோட்வாலி பகுதி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரில் தங்களது மகனை திருமணம் செய்துக்கொள்வதாக பெண் வீட்டார் ஏமாற்றி ,தங்களிடம் இருந்து பரிசுப்பொருட்கள் மற்றும் நகைகளை வாங்கிக்கொண்டதாகவும் , அதனை திரும்ப தரவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து விசாரணை செய்த காவல்துறை எஸ்.எச்.ஓ கிருஷ்ணா லால் படேல் மணமகள் வீட்டாரை அழைத்து பேசியுள்ளார்.
பெண் வீட்டார் மறுப்பு :
குற்றச்சாட்டை மறுத்த மணமகள் குடும்பத்தினர் தங்களுக்கு அவர்கள் கொடுத்த பரிசுகளில் எந்த நகையும் இல்லை ஆனால் கொடுத்த பரிசுகளை உடனடியாக திரும்ப கொடுத்துவிடுகிறோம் என தெரிவித்துள்ளனர். இந்த புகாரில் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் , பேச்சுவார்த்தையின் மூலம் இரு தரப்பையும் சமரசம் செய்து வைத்ததாக காவல் துறை அதிகாரி கிருஷ்ணா லால் படேல் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்