ஆன்லைன் உணவு டெலிவரியில் தவறான ஆர்டர்கள் வருவது புதிதல்ல. நிறைய பேருக்கு அவர்கள் செய்த ஆர்டர் அப்படியே மாறி வேறு ஒரு ஆர்டர் டெலிவரி செய்யப்பட்டிருக்கும். அந்த வகையில் அண்மையில் ஒரு சோமாட்டோ ஆர்டர் குறித்த புகார் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 


சோமாட்டோவில் ஆர்டர் செய்த நபர் ஒருவர் தனக்கு அசைவ உணவுகள் டெலிவரி செய்யப்பட்டிருந்தது குறித்து புகார் எழுப்பியுள்ளார். சோமாட்டோவில் தான் சைவ உணவுகள் ஆர்டர் செய்ததாகவும், ஆனால் அசைவ உணவுகள் மாற்றி அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். 






அது குறித்த அந்த நபரின் ட்வீட்டில் “நாங்கள் 5 பேரில் 4 பேர் சைவ உணவு சாப்பிடுபவர்கள். ஆனால் அசைவ உணவு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இதனை எப்படி நாங்கள் சாப்பிடுவது” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். 


இதற்கு உடனடியாக மன்னிப்பு கோரிய சோமாட்டோ ஆர்டர் செய்த நபர் தங்களது தனிப்பட்ட எண் வழியாக நிறுவனத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டது. 


















இருப்பினும் சோமாட்டோவுக்கு ஆதரவாகப் பலர் அதில் பதில் அளித்திருந்தனர். சிலர்,”இதற்காக நீங்கள் சோமாட்டீவை எப்படிக் குற்றம்சாட்ட முடியும்? இதற்கு பெரும்பாலான சமயங்களில் தொடர்புடைய ஓட்டல்கள்தான் காரணமாக உள்ளன. சோமாட்டோவை எப்படி குற்றம் சாட்ட முடியும்” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். 


மேலும் சிலர், ”தட்டைப் பார்த்தால் முழுதும் சாப்பிட்டுவிட்டுதான் புகார் அளித்தது போலத் தெரிகிறது” எனக் கேலி செய்துள்ளனர்,