வாரணாசி அச்சி கட் பகுதியில் தேருவோரம் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் சரளமாக ஆங்கிலத்தில் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஷ்ர்தா அவினாஷ் திருப்பதி என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், அவினாஷ் சுவாதியை அறிமுகப்படுத்த, தன்னைப் பற்றி பேசத் தொடங்குகிறார் சுவாதி.அவர் பேசும் போது, “ என்னுடைய பேரு சுவாதி..நான் தென் இந்தியாவுல இருந்து வர்றேன். நாம் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில பட்டப்படிப்பு முடிச்சுருக்கன்.


பிரசவத்தின் போது என்னோட உடலின் வலது பக்கம் செயலிழந்து போச்சு.. கடந்த 3 வருஷத்துக்கு முன்னாடி  வாரணாசிக்கு வந்தேன். இங்க இருந்துதான் பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கேன்” என்றார். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் சுவாதி இவை அனைத்தையும் ஆங்கிலத்தில் சரளமாக பேசினார். 


அதனைத்தொடர்ந்து  பேசிய அவினாஷ் உங்களுக்கு வாரணாசியில்  வேலை கிடைத்தால் செய்ய முடியுமா என்று கேட்க.. என்னால் செய்ய முடியும் என்றும் எனக்கு உதவி செய்யுமாறு கூறுங்கள் என்றும் கோரிக்கை வைக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


 



 


மேலும் பார்க்க: 


 






 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



பேஸ்புக் பக்கத்தில் தொடர



ட்விட்டர் பக்கத்தில் தொடர



யூடிபில் வீடியோக்களை காண