புது டெல்லி ரயில் நிலையத்தின் நடைமேடையில் 30 வயதுப் பெண் ஒருவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் நான்கு ரயில்வே ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் ரயில்வேயில் மின் துறை ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர் என போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர். வியாழக்கிழமை இரவு நடைமேடையில் அமைந்துள்ள ரயில் விளக்கு அறையில் பாதிக்கப்பட்ட பெண்ணை இந்த கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக போலீசார் தெரிவித்தனர். 


குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் மற்றவர்கள் வெளியே காவலுக்கு நின்றதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர், 35 வயதான சதீஷ் குமார், 38 வயதான வினோத் குமார், 33 வயதான மங்கள் சந்த் மற்றும் 37 வயதான ஜகதீஷ் சந்த் என தெரிய வந்துள்ளது.


இதுகுறித்து ரயில்வே டிசிபி ஹரேந்திர சிங் கூறுகையில், "அதிகாலை 3.27 மணியளவில் அந்த பெண் காவல் நிலையத்திற்கு போன் செய்து சம்பவம் குறித்து தகவல் அளித்தார். போலீசார் உடனடியாக ஸ்டேஷனுக்கு விரைந்து சென்று அவரை மீட்டனர்" என்றார்.


ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் தான் வசிப்பதாக அந்த பெண் போலீசாரிடம் கூறியுள்ளார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து வேலை தேடி வந்திருப்பதும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சதீஷை தனது நண்பர் ஒருவர் மூலம் சந்தித்ததாகவும், அவர் தனக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்ததாகவும் அந்த பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.


வியாழன் அன்று, சதீஷ் அவரை தனது புதிய வீட்டில் தனது மகனின் பிறந்தநாள் இருப்பதாக கூறி வரவழைத்தார். இரவு 10.30 மணியளவில் அந்த பெண் சதீஷை கிர்த்தி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சந்தித்திருக்கிறார். பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணை புது தில்லி ரயில் நிலையத்திற்கு சதீஷ் அழைத்துச் சென்றுள்ளார்.


அங்கு குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் அவர்களை சந்தித்திருக்கின்றனர். பின்னர் ரயில்நிலையத்தில் அமைந்துள்ள விளக்கு அறைக்குள் பாதிக்கப்பட்ட பெண்ணை அவர்கள் கும்பலாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்.


பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் அளித்த இரண்டு மணி நேரத்தில் நான்கு குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண