விமானம் ஏறிய பெற்றோருக்கு சர்ப்ரைஸ்! பைலட்டாக நின்ற மகன்.. நெகிழ்ச்சி வீடியோ

இந்திய விமானி ஒருவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Continues below advertisement

இந்திய விமானி ஒருவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அது வைரலாக பரவி பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. @desipilot11 என்ற இன்ஸ்டாகிராம் பயனர், சமீபத்தில் தனது பெற்றோரை ஜெய்ப்பூருக்கு விமானத்தில் அழைத்துச் சென்று அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

 

பெற்றோரை விமானத்தில் அழைத்து சென்ற விமானியின் பெயர் கமல் குமார். இந்த மனதைக் கவரும் வீடியோ வைரலாகி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் 2.7 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. 1 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் பயனர்களால் லைக் செய்யப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், விமானத்தை ஓட்டப் போவது தங்கள் மகன் என்பதை அறியாத விமானியின் பெற்றோர், விமானத்திற்குள் பைலட் சீருடையில் தனது மகனை கண்டு மகிழ்ச்சியில் திக்குமுக்காடினர். 

"நான் விமானத்தை ஓட்ட தொடங்கியதிலிருந்தே இதற்காகதான் காத்திருந்தேன். இறுதியாக பெற்றோர்களை ஜெய்ப்பூருக்கு வீட்டிற்கு அழைத்து செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு உணர்வு" என்று கமல் பதிவிட்டிருந்தார்.

இதுபோன்ற தருணம் கேமராவில் சிக்குவது இது முதல் முறையல்ல. முன்னதாக மே மாதம், ஜஹ்ரா என்ற பெண், தான் ஏறிய விமானத்தின் தலைமை பைலட்டாக இருந்த தனது கணவரின் வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் ஹிட் அடித்தது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

Continues below advertisement