மத்தியப் பிரதேசத்தில் நள்ளிரவில் கர்ப்பிணியை மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்ற 108 ஆம்புலன்ஸில் டீசல் தீர்ந்ததால், சாலையோரத்திலேயே பெண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் நேற்று (அக்.29) இரவு பிரசவத்துக்காக பழங்குடியினப் பெண்ணான ரேஷ்மா 108 ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


அப்போது அவரைக் கூட்டிச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தின் எரிபொருள் இடையிலேயே தீர்ந்துள்ளது. இதனால் சாலையோரத்திலேயே ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு, தொடர்ந்து அப்பெண்ணுக்கு பிரசவமும் பார்க்கப்பட்டுள்ளது.


பன்னா மாவட்டத்தின், ஷாநகர் பகுதியில் உள்ள பனௌலியில் நடந்த இச்சம்பவத்தின் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


 






இந்த வீடியோவில் சில சுகாதார ஊழியர்கள் தரையில் அமர்ந்து குழந்தையை பிரசவிக்கும் பெண்ணுக்கு உதவுவது பதிவாகி உள்ளது. 


நள்ளிரவில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் டீசல் தீர்ந்ததால் பெண்ணுக்கு சாலையோரம் பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


108 ஆம்புலன்ஸ் பயண நேரம்


சென்னையில் 108 ஆம்புலன்ஸ், அழைக்கப்பட்ட நேரத்தில் இருந்து நோயாளிகளை சென்றடையும் சராசரி பயண நேரம் 7 நிமிடமாகக் குறைந்துள்ளதாகக்த் தகவல் வெளியாகியுள்ளது 


முன்னதாக 2020ஆம் ஆண்டில் ஒருவர் சேவை கோரி அழைத்தவுடன் புறப்படும் ஆம்புலன்ஸ் சராசரியாக அடுத்த 8 நிமிடங்கள் 40 விநாடிகளில் நோயாளியைச் சென்றடைந்தது. இந்நிலையில் 108 ஆம்புலன்ஸின் பயண நேரம் 7 நிமிடங்களாகக் குறைந்துள்ளது. அதாவது சென்னையில் 108 ஆம்புலன்ஸ், அழைக்கப்பட்ட நேரத்திலிருந்து நோயாளிகளை சென்றடையும் சராசரி பயண நேரம் 7 நிமிடமாகக் குறைந்துள்ளது. 


கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னதாக 2020இல் சென்னையில் மொத்தம் 52 ஆம்புலன்ஸ்கள் இயங்கி வந்தன. அப்போது, ஆம்புலன்ஸ் சராசரியாக அடுத்த 8 நிமிடங்கள் 40 விநாடிகளில் நோயாளியைச் சென்றடைந்தது. இந்நிலையில் தற்போது 108 ஆம்புலன்ஸின் பயண நேரம் 7 நிமிடமாகக் குறைந்துள்ளது. 79 ஆம்புலன்ஸ்கள் சென்னையில் இயங்கி வருகின்றன. 


இதில் அடிப்படை உயிர் பாதுகாப்புக்கான மருத்துவ உதவியை அளிக்கும் 53 ஆம்புலன்ஸ்கள், மேம்படுத்தப்பட்ட, நவீன உயிர் பாதுகாப்புக்கான மருத்துவ உதவியை அளிக்கும் 10 ஆம்புலன்ஸ்கள், 3 நியோ நேட்டல் ஆம்புலன்ஸ்கள் மற்றும் 13 பைக் ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. 


இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் மாவட்டத் திட்ட மேலாளர் சந்தீப் குமார் கூறும்போது, ’’108 ஆம்புலன்ஸின் பயண நேரம் 7 நிமிடமாகக் குறைந்துள்ளது. அதாவது சென்னையில் 108 ஆம்புலன்ஸ், அழைக்கப்பட்ட நேரத்திலிருந்து நோயாளிகளை சென்றடையும் சராசரி பயண நேரம் 7 நிமிடமாகக் குறைந்துள்ளது. முன்னதாக 2020ஆம் ஆண்டில் ஒருவர் சேவை கோரி அழைத்தவுடன் புறப்படும் ஆம்புலன்ஸ் சராசரியாக அடுத்த 8 நிமிடங்கள் 40 விநாடிகளில் நோயாளியைச் சென்றடைந்தது.


சராசரி பயண நேரம் குறைந்ததற்கு, ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதும், ஹாட்ஸ்பாட்களின் அருகிலோ அல்லது ஹாட்ஸ்பாட்டிலேயோ ஆம்புலன்ஸ்களை நிறுத்தி வைத்ததும் முக்கியக் காரணங்கள் ஆகும்’’ என்று தெரிவித்துள்ளார்.